நஜீப்
நன்றி: 12.04.2026 ஞாயிறு தினக்குரல்
சஜித் கம்மன்பில புத்தக வெளியீட்டு விழாவுக்குப் போனது தொடர்பாக கட்சிக்குள் இன்றும் பெரும் ரகளைகள் தொடர்கின்றன. ஆனால் இந்த வைபத்திக்கு போவதை தலைவர் சஜித் ஆரம்பத்தில் நிராகரித்திருக்கின்றார்.
ஆனால் அவரை கூட்டத்துக்கு அழைத்துச் செல்வதற்கு இப்படி ஒரு கதை சொல்லப்பட்டதாம். அணுராவுக்கு எதிராக எமக்குத் தனியாக நின்று தாக்குப்பிடிக்க முடியாது.
எனவே நாம் மொட்டுக் கட்சியுடன் நெருக்கமான உறவை இப்போதிருந்தே வளர்த்துக் கொள்ள வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் அவர்களின் உதவியையும் பெற்றுக் கொள்ள நாம் தந்திரமாக நடந்து கொள்ள வேண்டும்.
அப்போதுதான் சஜித்துக்கு பொது வேட்பாளராக தேர்தலில் நிற்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று ஆலோசனைகள் வழங்கப்பட்டிருக்கின்றது.!
சஜித் மனைவியின் உறவினர் ஒருவரும் பிணை முறியில் தவறுகள் ஏதுவுமே நடக்கவில்லை என்று புத்தகம் போட்டவரும் சேர்ந்துதான் சஜித்தை ஏமாற்றி அங்கு அழைத்துச் சென்றார்கள் என்று தகவல்கள்.!




