நஜீப்
நன்றி: 29.03.2026 ஞாயிறு தினக்குரல்
தற்போது நடந்து கொண்டிருக்கின்ற போர் தமது தலைகளைக் காப்பாற்றி விடாதா? என்று இங்குள்ள சமூக விரோதிகளும் அவர்களது கையாட்களும் சிந்திப்பதை பல இடங்களில் அவதானிக்க முடிகின்றது.
உலகம் பூராவிலும் நெருக்கடி காரணமாக இங்கும் பொருட்களில் விலை அதிகரிப்பு தட்டுப்பாடு என்பது ஏற்படுவது இயல்பானது. சில தினங்களுக்கு முன்னர் பிலிப்பைன்ஸ் அரசு போர் காரணமாக நாட்டில் அவசரகால நிலமையை பிரகடனம் செய்திருக்கின்றது.
ஆனால் இங்கு இந்த நெருக்கடிகளை முன்வைத்து நாட்டில் அரசுக்கு எதிரான ஒரு கிளர்ச்சியை உண்டு பண்ணுவது பற்றி சந்திப்புக்களும் கலந்துரையாடல்களும்…!
அப்படி ஒரு ஆட்சிமாற்றம் இங்கு நடந்தால் தற்போது சமூகவிரோத செயல்பாடுகளில் ஈடுபட்டு நீதிமன்ற விசாரணைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றவர்களும் வர இருப்பவர்களும் தமக்கு தப்பிக் கொள்ள வழி பிறக்கும் என்று நம்புகின்றார்கள். அதனால்தான் அவர்களின் இந்த கனவு.!



