கெஜ்ரிவால்: விழிக்கும் பாஜக!

இதுவரை வழக்கத்தில் இல்லாத ஒரு விஷயத்தை அதிரடியாக அறிவித்து, பாஜகவுக்கு எரிச்சலை கூட்டி உள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.. இதுதான் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பி விட்டுள்ளது..!

இந்த முறை தேர்தலில் காங்கிரஸை முந்திக் கொண்டு ஆம் ஆத்மி மேலெழுந்து வந்து கொண்டிருக்கிறது.. இத்தனை காலமும் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் போட்டி என்ற நிலையை உடைத்தெறிந்து, ஆம் ஆத்மி டஃப் தந்து வருகிறது.

பஞ்சாப் மாநிலம் உட்பட பல்வேறு தொகுதிகளில் பாஜகவுக்கு போட்டியாக ஆம் ஆத்மி திகழ்ந்து வருகிறது.. அதேபோல, பாஜகவின் அதிருப்திகளை இந்த தேர்தலில் அறுவடை செய்யவும் ஆம் ஆத்மி காத்து கொண்டிருக்கிறது..

அந்த வகையில், மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை குடியரசு தின நிகழ்ச்சியில் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார்.. மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் குடியரசு தலைவர், பிரதமர், மாநில முதல்வர்களின் படங்கள் இருப்பதுதான் வழக்கமான விஷயமாகும்…

இதற்குதான் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். டெல்லி அரசு அலுவலகங்களில் இனி முதலமைச்சர்கள் படமோ, அரசியல்வாதிகளின் படமோ மாட்டப்படாது என்றும், அரசு அலுவலகங்களில் இனி அம்பேத்கர் படமும், பகத்சிங் படமும் மட்டுமே மாட்டப்படும் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளார்.

கடந்த 23-ம் தேதியிலிருந்து இந்தியா முழுவதும் குடியரசு தினம் கொண்டாடப்பட்டுவருகிறது… அந்த வகையில் நேற்றைய தினம் டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்…

அப்போது நிகழ்ச்சியில் பேசியபோது, “டெல்லி அரசின் ஒவ்வோர் அலுவலகத்திலும், பொதுவாக அரசியல் தலைவர்கள், குடியரசு தலைவர்கள், பிரதமர்கள், முதலமைச்சர்கள் போன்றோரின் போட்டோக்கள்தான் இருக்கும்…

ஆனால், இனி எந்த அரசியல்வாதியின் போட்டோக்களையும் வைக்க மாட்டோம்… அதுக்கு பதிலாக டாக்டர் அம்பேத்கர், பகத் சிங்கின் போட்டோக்கள் இருக்கும் என்று நான் அறிவிக்கிறேன்.. காரணம், அம்பேத்கர், பகத் சிங் ஆகியோரால் நான் பெரிதும் ஈர்க்கப்பட்டவன்..

அவர்கள் 2 பேருமே ஒரே கனவு மற்றும் லட்சியங்களுக்காக வெவ்வேறு வழிகளில் செயல்பட்டவர்கள்… ஏழை, பணக்காரன் என அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான கல்வி வேண்டும் என்ற அம்பேத்கரின் கனவை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன்..

கடந்த 7 ஆண்டுகளில் கல்வித் துறையில் அந்த புரட்சியை கொண்டு வந்துள்ளோம். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலானியா ட்ரம்ப் டெல்லி அரசு பள்ளிகளை பார்வையிட்டார்…

எங்களுக்கு சான்றிதழும் கிடைத்தது. இந்திய அரசியலமைப்பின் தந்தை என்று அம்பேத்கர் அழைக்கப்படுகிறார்… அவர் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும் திகழ்ந்தவர்..

புதிய வழக்கம்

குடியரசுத் தலைவர், பிரதமர்கள், முதல்வர்கள் போட்டோக்களே பொதுவாக அரசு அலுவலகங்களில் இன்றும் காணப்படுகின்றன. ஆனால், இனி அப்படி டெல்லி இருக்காது.. டெல்லியின் அலுவலகங்களில் இது வழக்கமாக தொடராது” என்று பேசியுள்ளார்..

இதுவரை நடைமுறையில் இல்லாத புதிய வழக்கத்தை அறிவித்ததுடன், அம்பேத்கரையும், பகத்சிங்கையும் கெஜ்ரிவால் கையில் எடுத்துள்ளது, அரசியல் அரங்கில் பேசுபொருளாகியிருக்கிறது.

 

 

 

Previous Story

பெண்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்! தாலிபான்களின் அறிவிப்பு!

Next Story

தரக்குறைவாக திட்டிய பைடன்: 'கூலாக' கையாண்ட நிருபர்