நஜீப் பின் கபூர்
இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு விசேட செய்தியாளர்கள் சந்திப்பில் உதய கம்மன்பில பல அதிரடியான தகவல்களை வெளியிட்டிருக்கின்றார்.
இவர்கள்தான் தற்போது தடுப்புக்காவலில் இருக்கின்ற துவான் சுரேஸ் சாலேயையும் விடுவித்துக் கொள்வதற்கு முயன்று கொண்டு வருகின்றனர்.
தான் நடாத்திய இந்தச் சந்திப்பில் இன்னும் 300 மனித குண்டுகள் நாட்டில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டு வருகின்றனர் என்றும் அவர் அடித்துச் சொல்லி இருக்கின்றார்.
இது பற்றி தான் ஆய்வு செய்த எழுதிய புத்தகம் வரும் மார்ச் 31ம் திகதி வெளியிட இருப்பதாகவும் அவர் அங்கு சுட்டிக்காட்டி இருக்கின்றார்.
நாட்டில் மீண்டும் ஒரு வன்முறைக்கான துவக்க ஏற்பாடுகளாகத்தான் நாம் இதனைப்பார்க்கின்றோம்.
இதற்கு முன்னரும் மலட்டுக் கொத்து ஆடை அணிகள் மலட்டு வைத்தியர் போன்ற கதைகளையும் இவர்கள்தான் சந்தைப்படுத்தி முஸ்லிம்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்தனர் என்பதும் தெரிந்ததே.!
எனவே முஸ்லிம்கள் மட்டுமல்ல முஸ்லிம் அல்லாதவர்களும் எச்சரிக்கையுடன் இருந்து கொள்ள வேண்டி இருக்கின்றது
இது பற்றி பொலிசில் சொல்லலாமே என்று கேட்டால் ஏன் அவர்களிடம் சொல்ல வேண்டும்.?
நான் முழு நாட்டுக்கும் சொல்ல இருப்பதாகவும் அவர் அங்கு சுட்டிக்காட்டி இருக்கின்றார்.! புரிகின்றதா கதை.!
நோன்பு இருபத்தி எழு முஸ்லிம்களுக்கு புனிதமான நாளில் இப்படியான ஒரு செய்தியை வெளியிட்டிருப்பதும் பல சந்தேகங்களை முஸ்லிம்களுக்கு உண்டு பண்ணி இருக்கும்!



