வடக்குகிழக்கு மக்கள்:

வாழ்வாதாரம், அபிவிருத்தி அவர்கள் விருப்பு-மிலிந்த மொரகொட

வடக்குகிழக்கு மக்களிற்கு அரசமைப்பு தொடர்பான விடயங்களில் ஆர்வமில்லை- வாழ்வாதாரம் அபிவிருத்தியையுமே அவர்கள் விரும்புகின்றனர்என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார்இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்
செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தின் முன்னிலையில் ஆற்றிய உரையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச புதிய அரசமைப்பினை உருவாக்குவதற்காக தான் உருவாக்கியுள்ள நிபுணர் குழு குறித்து குறிப்பிட்டார்.அதனை அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தின் முன்னிலையில் விவாதத்திற்கு சமர்ப்பிப்பேன் என . அவர் தெரிவித்துள்ளார்இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார்
அவருக்கு இதற்கான வாய்ப்பை வழங்கவேண்டும் என நான் கருதுகின்றேன்-எனதுவாழ்க்கையில் இது தொடர்பான பல விடயங்களில் ஈடுபட்டவன் என்ற அடிப்படையில் வடக்குகிழக்கு பகுதிகளிற்கு சென்றவேளை அவர்கள் அரசமைப்பு தொடர்பான விடயங்களில் ஆர்வமாக இல்லை என்பதை நான் அவதானித்தேன்.இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார்
அவர்கள் வாழ்வாதாரத்தையும் அபிவிருத்தியையுமே விரும்புகின்றனர்-அனைத்து அரசியல் கட்சிகளும் இதனை அடிப்படையாக வைத்தே செயற்படவேண்டும். இரண்டு விடயங்களில் ஒத்துழைப்பு இடம்பெறலாம் என நான் கருதுகின்றேன்-இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார்
ஒன்று அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய அரசமைப்பினை உருவாக்கும் யோசனை தொடர்பானது- இரண்டாவது வடக்குகிழக்கை எவ்வாறு அபிவிருத்தி செய்யவேண்டும் என்பது தொடர்பான புரிந்துணர்விற்கு வருவது .இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார்
ஏனென்றால் மக்கள் நாங்கள் அரசமைப்பு குறித்து தீர்மானிக்கும் வரை தங்கள் வாழ்வாதாரம் எதிர்காலத்திற்காக காத்திருக்கப்போவதில்லை-இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார்
இலங்கையின் பொருளாதார நிலைமை எவ்வளவு மோசமானதாக உள்ளது?
பதில்- எங்கள் முன்னாள் இரண்டு சவால்கள் உள்ளன முதலாவது அந்நியசெலாவணி நெருக்கடி அது தற்போது பாதிப்பை ஏற்படுத்திவருகின்றது-இரண்டாவது நிதிசார்ந்த சவால் – இது எங்களின் சக்தி அப்பால் நாங்கள் வாழ்ந்ததால் சுதந்திரத்தின் பின்னர் சுவீகரிக்கப்பட்ட பாரம்பரியம்.பெருந்தொற்று இதனை முன்னணிக்கு கொண்டுவந்துள்ளது.
அமெரிக்க வர்த்தக ஜாம்பவானும் முதலீட்டாளருமான வரென்பவட் அலை குறையும்போது யார்நிர்வாணமாக நீந்துகின்றார்கள் என்பது தெரியவரும் என தெரிவித்துள்ளார்-பெருந்தொற்று உண்மையான அலையை உருவாக்கியுள்ளது என நான் கருதுகின்றேன்.
இது நாங்கள் எதிர்கொள்ளும் உண்மையான சவால்.
நிலைமையை ஒரளவு ஸ்திரப்படுத்துவதற்கு இந்தியா முன்வந்துள்ளது.ஆனால் நாங்கள் அடிப்படை காரணங்களிற்கு தீர்வை காணவேண்டும்.
கேள்வி – இந்தியா எவ்வாறு உதவியது?
இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச 2021 டிசம்பரில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டவேளை நாங்கள் நான்கு ஒத்துழைப்பு தூண்களிற்கு குறுகிய காலத்திற்கு இணக்கம் தெரிவித்தோம்.
முதலாவது உணவு மற்றும் மருத்துவ பொருட்களிற்கான அவசர உதவி -சமீபத்தில் நிதியமைச்சருடன் மேற்கொண்ட மெய்நிகர் சந்திப்பின் பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் 1பில்லியன் கடனுதவியை அறிவித்தார்.
இரண்டாவது எங்கள் பெட்ரோலிய விநியோகத்திற்கு உதவுவது கடந்த புதன்கிழமை 500மில்லியன் டொலர் கடனுதவி அறிவிக்கப்பட்டுள்ளது-மற்றையது திருகோணமலை எண்ணெய் குதம் தொடர்பில் இந்தியாவுடன் ஒத்துழைப்பது நாங்கள் எப்படி எரிபொருள் பாதுகாப்பு மற்றும் சேமிப்பிற்காக இணைந்து செயற்படலாம் என்பது தொடர்பானது.இது இரண்டாவது தூண்.
மூன்றாவது இந்தியா எப்படி எங்களின் வெளிநாட்டு நாணயபற்றாக்குறை நெருக்கடிக்கு இரண்டு கட்டங்களில் உதவலாம் என்பது தொடர்பானது.
முதலாவது ஆசிய கிளியரிங் யூனியனுக்கான எங்கள் நிலுவை தொகையை இரண்டு மாதங்களிற்கு பிற்போட்டு இந்தியா எங்களிற்கு ஆதரவளித்தது-இது 500 மில்லியன்மற்றையது 400மில்லியன் பரிமாற்றம் ( ஸ்வாப்)
நான்காவது தூண் முதலீடு- நான் சுற்றுலாத்துறையை சேர்த்துக்கொள்வேன்-இந்தியாவே எங்களின் மிகப்பெரிய சுற்றுலா சந்தை என்பதால் .பெருந்தொற்றிற்கு முன்னர் 20 முதல் 25 வீதமான சுற்றுலாப்பயணிகள் இந்தியாவிலிருந்தே வந்தனர்.
கேள்வி- கடந்த சில வருடங்களாக இந்தியா இலங்கை உறவுகள் ஒரேமாதிரியானதாக காணப்படவில்லை-பொருளாதார நிலை காரணமாக இந்தியாவுடனான உறவுகள் குறித்து மறுபரிசீலனை செய்யவேண்டும் என நீங்கள் தெரிவிப்பீர்களா?
பதில்- மிலிந்த மொரகொட -மறுபரிசீலனை என நான் தெரிவிக்க மாட்டேன்-கோத்தபாய ராஜபக்ச பதவிக்கு வந்தது முதல் இந்தியாவுடனான உறவுகள் குறித்து அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.
அவர் இருநாடுகளும் மேலும் நெருக்கமாகவேண்டும் என விரும்புகின்றார்-இரண்டுநாடுகளின் பொருளாதாரங்களும் மேலும் அதிகளவிற்குஒருங்கிணைக்கப்படவேண்டும் என விரும்புகின்றார்.பெருந்தொற்று அவருக்கு மிகவும் மோசமான தருணத்தில்பரவ தொடங்கியுள்ளது.
அவர் ஆட்சிக்கு வந்தவுடன் பெருந்தொற்று ஆரம்பித்தது.ஆனால் அங்கும்இந்தியா தடுப்பூசிகளுடன் வந்தது-உங்களால் தொடர்ந்தும் ஏற்றுமதி செய்ய முடியாத நிலை வரும் வரை நீங்கள் உதவினீர்கள்-எங்களிற்கு முதலில் ஆதரவளித்தது நீங்களே
கேள்வி – இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் முறுகல் பாரம்பரியம் காணப்படுவதற்கு காரணம் தமிழர் விவகாரம்- சமீபத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13வது திருத்த்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோரி இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்கள் – இரண்டு நாடுகளிற்கும் இடையில்இது ஒரு விவகாரமாக மாறுவதற்கான வாய்ப்புள்ளதாக நீங்கள் கருதுகின்றீர்களா?
பதில்-செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தின் முன்னிலையில் ஆற்றிய உரையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச புதிய அரசமைப்பினை உருவாக்குவதற்காக தான் உருவாக்கியுள்ள நிபுணர் குழு குறித்து குறிப்பிட்டார்.அதனை அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தின் முன்னிலையில் விவாதத்திற்கு சமர்ப்பிப்பேன் என அவர்தெரிவித்தார்.
அவருக்கு இதற்கான வாய்ப்பை வழங்கவேண்டும் என நான் கருதுகின்றேன்-
எனதுவாழ்க்கையில் இது தொடர்பான பல விடயங்களில் ஈடுபட்டவன் என்ற அடிப்படையில் வடக்குகிழக்கு பகுதிகளிற்கு சென்றவேளை அவர்கள் அரசமைப்பு தொடர்பான விடயங்களில் ஆர்வமாக இல்லை என்பதை நான் அவதானித்தேன்.
அவர்கள் வாழ்வாதாரத்தையும் அபிவிருத்தியையுமே விரும்புகின்றனர்-அனைத்து அரசியல் கட்சிகளும் இதனை அடிப்படையாக வைத்தே செயற்படவேண்டும்.
இரண்டு விடயங்களில் ஒத்துழைப்பு இடம்பெறலாம் என நான் கருதுகின்றேன்-ஒன்று அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய அரசமைப்பினை உருவாக்கும் யோசனை தொடர்பானது- இரண்டாவது வடக்குகிழக்கை எவ்வாறு அபிவிருத்தி செய்யவேண்டும் என்பது தொடர்பான புரிந்துணர்விற்கு வருவது .
ஏனென்றால் மக்கள் நாங்கள் அரசமைப்பு குறித்து தீர்மானிக்கும் வரை தங்கள் வாழ்வாதாரம் எதிர்காலத்திற்காக காத்திருக்கப் போவதில்லை-வடக்குகிழக்கு மக்களிற்கு அரசமைப்பு தொடர்பான விடயங்களில் ஆர்வமில்லை- வாழ்வாதாரம்அபிவிருத்தியையுமே அவர்கள் விரும்புகின்றனர்- மிலிந்த மொரகொட
கேள்வி- ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரை கூட சந்திக்கவில்லைஎன்பதே ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக முன்வைக்கப்படும் விமர்சனங்களில் ஒன்று – குரோதபேச்சுக்களிற்காக இலங்கையின் சட்ட அமுலாக்கல் அதிகாரிகளினால் நடவடிக்கை எடுக்கப்பட்ட பௌத்தமதகுருவை ஜனாதிபதி நியமித்தமை குறித்தும் கரிசனைகள் காணப்படுகின்றன.?
பதில்-நாங்கள் ( இலங்கை ) ஜனநாயக நாடு அங்கு பலவிதமான குரல்கள் ஒலிக்கும்.இன்று உலகம் முழுவதிலும் துருவமயப்படுத்தல் பிரிவினை பூதாகாரமயப்படுத்துதல் போன்றவை காணப்படுகின்றன – இது இலங்கைக்கு மாத்திரம் தனித்துவமான விடயமல்ல இந்த சூழமைவின் அடிப்படையிலேயே இதனை நாங்கள் பார்க்கவேண்டும்.
சமூக ஊடகங்கள் மற்றும் தங்கள் அடையாளங்களில் கவனம் செலுத்தும் இன்றைய உலகில் பிரிவினைகள் பலவிதமாக உள்ளன. இதனை இந்த சூழமைவிலேயே வைத்துப்பார்க்கவேண்டும்.கருத்தொருமையை உருவாக்கும் விடயத்தில்
இந்து சமுத்திரத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கான தீவிர போட்டியை இலங்கை எவ்வாறு பார்க்கின்றது? ஒரு பக்கத்தில் சீனா – மற்றைய பக்கத்தில் குவாட்டுடன் இந்தியா
மிலிந்தமொராகொட-வரலாறு முழுவதும் எங்களது மிகப்பெரும் சவால்களும்சந்தர்ப்பங்களும் இந்து சமுத்திரத்திலிருந்தே வந்துள்ளன.
நாங்கள் போர்த்துக்கீசர்கள் ஒல்லாந்தர்கள் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் கீழ் காணப்பட்டோம் அனைத்திற்கும் எங்கள் கேந்திரமுக்கியத்துவமே காரணமாக காணப்பட்டது.
1980களில் இலங்கை அமெரிக்காவிற்கு நெருக்கமாக உள்ளது என கருதப்பட்டவேளை இந்தியாவுடன் பதற்றம் காணப்பட்டது அதனால் விளைவுகள் ஏற்பட்டன.
சீனா புதிய நாடு இந்த விடயத்தினை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து நாங்கள் எங்கள் வரலாறுகளில் இருந்து பாடங்களை கற்றுள்ளோம்.
சிலவேளைகளில் நாங்கள் தவறிழைக்கின்றோம் -பாடங்களை கற்றுக்கொள்கின்றோம்இதுவே எங்கள் தலைவிதி நாடொன்றின் யதார்த்தம் இது–நாங்கள் இதனை கையாளவேண்டும்.
Previous Story

அரசியல் கைதிகள்: விரைவில் தீர்வு – நீதி அமைச்சர்

Next Story

"புலி ஆண்டு" சீன நியூ இயர் 2022