ஹோடல் செய்யும் சந்திரிகா!

நஜீப் 

நன்றி: 08.03.2026 ஞாயிறு தினக்குரல்

சில தினங்களுக்கு முன்னர் மரணமான புரட்சிகர பத்திரிகையாளர் விக்டர் ஐவன் அவர்களின் முதலாவது ஞாபகார்த்த நிகழ்வு அண்மையில் கொழும்பில் நடைபெற்றது. அதில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி ரணில் ஆகியோரும் இன்னும் பலரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

அப்போது இதற்கு சந்திரிகாவையும் அழைத்திருக்கலாமே என்று இரு ஊடக நண்பர்கள் பேசிக் கொண்ட போது, பக்கத்தில் இருந்தவர் அவர்தானே விக்டரின் மிகப் பெரிய எதிரி.

சந்திரிகாவுக்கு எதிராக விக்கடர் புத்தகமே எழுதி இருந்தாரே என்று சொன்ன போது இல்லை அவர் வைராக்கியம் பாராட்டும் ஆள் கிடையாது. அழைத்தால் நிகழ்வுக்கு நிச்சயம் வந்திருப்பர் என்று சொல்ல….

இல்லை! இல்லை! அவருக்கு இதற்கெல்லாம் இப்போது நேரமில்லை. அவர் தற்போது காலியில் ஹோடல் ஒன்றை நடாத்திக் கொண்டு வருகின்றார். அதனால் அவர் இது போன்ற நிகழ்வுகளுக்கு வரமாட்டார் என்று அங்கு ஒருவர் குறிப்பிட்டார்.

 

Previous Story

குர்து படைகள் மீது IRGC தொடங்கிய தாக்குதல்!

Next Story

இன்னும் ’மெயின்’ ஆயுதத்தையே எடுக்கல-ஈரான்