விரைவில் தேர்தல் வருகின்றது!

நஜீப் 

நன்றி: 08.03.2026 ஞாயிறு தினக்குரல்

சில தினங்களுக்கு முன்னர் இந்திய உயர் ஸ்தானிகரை முன்னாள் ஜனாதிபதி ரணில் சந்தித்திருக்கின்றார். அப்போது இந்த மாகாண சபைத் தேர்தல் பற்றியும் அங்கு பேசப்பட்டிருக்கின்றது. அந்த உரையாடலில் இருந்து தேர்தல் விரைவில் வர இருப்பது பற்றி தூதுவர் அங்கு சூசகமாகத் தெரிவித்திருக்கின்றார் என்றும் தெரிய வருகின்றது.

இந்தக் கதையை ரணில் தனது கட்சி சகாக்களிடம் தெரியப்படுத்தி இருக்கின்றார். கட்சிக் கிளைகளை அமைத்து தயாராகுமாறு ரணில் அங்கு ஆலோசனை வழங்கி இருக்கின்றார்.

அப்போது அதற்கு முன்னர் மீண்டும் ஒருமுறை சஜித்துடன் பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு வரும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று ரணிலிடத்தில் சகாக்கள் கூறிய போது இதில் தனக்கு எந்த ஆட்சேபனைகளும் அதில் இல்லை என்று ரணில் தெரிவித்திருக்கின்றார்.

ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி தனியாக தேர்தலில் நின்றால் பலர் தள்ளி நிற்கத் தீர்மானித்திருப்தாகவும் தெரிகின்றது.

Previous Story

இன்று இரவு ஈரானில் 'நரகம்' | கொத்துக் குண்டுகள்!

Next Story

බුද්ධි පරීක්ෂණය පසුගිය විභාග ගැටළු-04 | IQ Past Paper Discussion