எகிரும் அனுர செல்வாக்கு! 78%-86%

நஜீப்

நன்றி:22.02.2026 ஞாயிறு தினக்குரல்

எதிரணி அரசியல்வாதிகள் ஜனாதிபதி அனுர செல்வாக்கு கனிசமாக சரிந்துவிட்டது. அனுராவுக்கு தற்போது இருபது சதவீத ஆதரவுதான் இருக்கின்றது. இப்படி பகிரங்கமாக கணக்குச் சொல்லி வருகின்றார் உதய கம்மன்பில. அதே பாணியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜிதும் பேசிவருகின்றார்.

தனக்கு இன்னும் செல்வாக்கு இருப்பதை ஜனாதிபதி மாகாணசபைத் தேர்தலை நடாத்தி உறுதி செய்ய வேண்டும் என்பது சஜித் வேண்டுகோள். இது போன்று நாமலும் அடிக்கடி சொல்லி வருகின்றார்.

சில வாரங்களுக்கு முன்னர் ஒரு அமைப்பு வெளியிட்ட கருத்துக்கணிப்புப்படி இந்த என்பிபி. அரசுமீதான செல்வாக்கு அப்படியேதான் இருக்கின்றது என்று சொல்லி இருந்தது.

சமூக விஞ்ஞான நிறுவனம் புதிதாக வெளியிட்டிருக்கும் கருத்துக் கணிப்பை பேராசியர் நிர்மல் ரஞ்சித் பகிரங்கப்படுத்தி இருக்கின்றார்.

அதன்படி ஜனாதிபதி அனுர செல்வாக்கு முழு நாட்டிலும் 78 சதவீதம். வடக்கில் இது 86சதவீதம். சஜித்துக்கு (எதிரணி) 12 சதவீதம் என்று அது இருக்கின்றது.

Previous Story

அமெரிக்கா மிரட்டியும் இரான் உறுதியாக இருப்பது ஏன்?

Next Story

"ලසන්ත ඝාතනය ෆොන්සේකාගේ වැඩක්" බව කියන්නැයි හමුදා බුද්ධි නිලධාරීන්ට බලපෑමක්