உடதலவின்ன மடிகே கலதெனிய-கண்டி மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட எஸ்.மொஹிதீன் அடுமை கண்டி மாவட்டத்துக்கான சமாதான நீதவானாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான சத்தியப்பிரமானத்தை கடந்த முப்பதாம் (30.01.2025) திகதி கண்டி மாவட்ட நீதவான் நீதி மன்ற நீதிபதி முன்னிலையில் அவர் சத்தியப் பிரமானம் செய்து கொண்டார்.
உடதலவின்ன மடிகே ஜாமியுல் அஸ்ஹர் தேசிய கல்லூரியின் பழைய மாணவரும் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஐ.டப்லியு.ஈ கற்கை நெறியை பூர்த்தி செய்தவருமாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அரசசேவையில் மொழிபெயர்ப்பாளராகவும் அரச சேவையிலும் கடமையாற்றி தற்போது ஒய்வு பெற்றுள்ள இவர் உடதலவின்னை மடிகேயில் இயங்கி வரும் யூபிஎல் வாசிகசாலையின் பொறுப்பதிகாரியாவும் கடமையாற்றி வருகின்றார். மேலும் பிரதேசத்தில் தமிழ்-சிங்கள பிரத்தியோக வகுப்புக்களையும் இவர் நடாத்தி வருகின்றார்.
‘தலவின்ன பூதொர’ என்ற பெயரில் 1979களிலிருந்து இவர் கலை இலக்கியத் துறையிலும் பங்காற்றி வருகின்றார்.
ஓய்வு பெற்ற கிராம அதிகாரி மர்ஹூம் மீராக்கண்டு முஹம்திரமலகே கெதர செய்தலவி அவர்களினதும் குஞ்சி முதலி கெதர மீராசாஹிப் நோனா பல்கீஸ் (மர்ஹிமா) அவர்களின் கனிஸ்ட புதல்வருமாவார் என்பது குறிப்பித்தக்கது.





