நமது ஆகாயக் கோட்டை

நஜீப்

நன்றி:01.02.2026 ஞாயிறு தினக்குரல்

வழக்கமாக அரசியல் குறிப்புக்களைச் சொல்கின்ற நாம் இப்போது ஒரு கற்பனைக் குறிப்பை அல்லது எதிரணிகளின் எதிர்பார்ப்புக்கு சாதகமாக ஒரு கனம் யோசிப்போம். எதிரணி அரசியல்வாதிகள் பேசுவது போல இந்த அரசு அதிரடியாகக் கவிழ வாய்ப்பில்லை.

அவர்களின் கனவுப்படி கதை அப்படித்தான் அமைகின்றது என்று வைத்துக் கொள்வோம். 159 பெரும்பான்மை பலத்தை வைத்திருப்பவர்கள் ரணிலைப்போல ஒரு தலைவரை ஒருபோதும் கொண்டுவர மாட்டார்கள். ஆனால் கற்பனை பண்ணுவோருக்கு எப்படி வேண்டுமானாலும் ஆகாயத்தில் கோட்டை கட்டலாம்.

அடுத்த தேர்தலில் என்பிபிக்கு அல்லது அனுராவுக்கு பின்னடைவு என்று வைத்துக் கொள்வோம். கடந்த நாடாளுமன்றத்தில் வெறும் மூன்று ஆசனங்களை மட்டும் வைத்துக் கொண்டு அவர்கள் என்ன குத்தாட்டம் காட்டினார்கள்.

இந்தப் பின்னடைவு இவர்களை (NPP) ஐம்பது ஆசனங்களுக்கு மேல் சரியவிடாது. இந்த நிலையில் அரசைப் பொறுப்பேற்பவர்கள் நிலை என்னவாக இருக்கும் என்று ஒரு முறை கற்பனை செய்து பாருங்கள்.

Previous Story

IRAN-ஐ சூழ்ந்த ராட்சசன் ! சுப்ரீம் லீடரை கடத்த முடிவு? CHINA திடீர் உதவி

Next Story

ஈரான் ஆயுதங்களால் பம்பிய அமெரிக்கா...!