நஜீப்
நன்றி:25.01.2025 ஞாயிறு தினக்குரல்

சந்தைகளில் என்ன பொருட்களை வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம். தேவையானவர்கள் கொள்வனவு செய்யலாம் தேவை இல்லாதவர்கள் அவற்றைத் தவிர்த்துக் கொள்ளலாம். ஆனால் நாம் விரும்பியும் விரும்பாமலும் சில பொருட்களை கொள்வனவு செய்யும் கட்டாயத்தில் இருக்கின்றோம்.
உள்நாட்டில் சில ஊடகங்கள் இப்படி பொய்களைத் தினிக்கின்றன. போதிய தெளிவில்லாத மக்கள் அவற்றை நம்பி ஏமாந்து வருகின்றார்கள். இதுவும் அப்பட்டமான ஒரு கொள்ளையே. களனி விகாரையில் காட்சிப்படுத்திய நாகப் பாம்பு பௌத்த சமயத்தையே கேவலப்படுத்தி விட்டது. டாக்டர் சாபி விவகாரம் இன ஐக்கியத்தை எப்படி எல்லாம் காயப்படுத்தியது.
ஈரான்-அமெரிக்கா விவகாரத்தில் சவர்வதேச ஊடகங்கள் நடந்து கொள்ளும் ஒழுங்கை ஒருமுறையை பாருங்கள். காசுக்காக எப்படி எல்லாம் போலி செய்திகள் சந்தைக்கு வருகின்றன? ஊடகங்களும் காசுக்கு விலைபோகின்றன.
எனவே செய்திகளை உள்வாங்கிக் கொள்வதற்கும் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து வருகின்றோம்.




