நஜீப்
நன்றி:18.01.2025 ஞாயிறு தினக்குரல்
நெடுங்காலமாக நடாத்தப்படாது இருந்த மாகாணசபைத் தேர்தலை எப்படி நடாத்துவது என்று தீர்மானிப்பதற்கு குழு அமைக்கப்பட்டிருக்கின்றது.
அனேகமாக பழைய விகிதாசார முறைப்படிதான் இந்தத் தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சிறுபான்மைக் கட்சிகளும் இதனைத்தான் விரும்புகின்றன.
தேர்தலை தள்ளிப் போடுவது தமக்கு சாதகமில்லை என்று என்பிபி. தலைவர்கள் நம்புகின்றார்கள். அதனால் ஜூலைக்குப் பின்னர் இந்தத் தேர்தலை நடத்த அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக நமக்கு வரும் தகவல்கள் கூறுகின்றன.
அப்படி இந்தத் தேர்தல நடக்குமாக இருந்தால் சஜித்தின் ஐமச. நாமலின் மொட்டு மற்றும் ரணில் தலைமையிலான ஐதேக. என்பன தனியாகத்தான் இந்தத் தேர்தலில் போட்டிக்கு வரும்.
இந்தத் தேர்தலில் ஐதேக. செல்வாக்கை நாட்டுக்குத் தோலுரித்துக்காட்ட தேர்தலை பாவித்துக் கொள்ள முடியும் என்று சஜித் நம்புகின்றார்.
NPP தேர்தல் தனகுத்தான் வாய்ப்பு என்று உறுதியாக நம்புகின்றது.





