நஜீப்
நன்றி:18.01.2025 ஞாயிறு தினக்குரல்
கல்வி சீர்திருத்தம் தொடர்பாக எழுந்திருக்கின்ற சிக்கல்கள் தொடர்பான விமர்சனங்கள் நாட்டில் பரவலாக இருந்து வருகின்றன. எதிரணி அரசியல்வாதிகள் இதனை ஒரு வாய்ப்பாக பாவித்து வருவதும் தெரிந்ததே.
அதனால்தான் விமல் வீரவன்ச உண்ணா விரோத போராட்டம் ஒன்றை ஆரம்பித்தார். இடைநடுவில் கைவிட்டார் என்றும் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன.
இது தொடர்பாக பேராசிரியர் GL. தலைமையில் சில தினங்களுக்கு முன்னர் கண்டியில் இருக்கும் பௌத்த பீடாதிபதிகளை சந்தித்த குழுவினர் நான்கு பீடங்களும் இணைந்து இந்த சீர்திருத்தங்களுக்கு எதிராக பொது அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்று அந்தக் குழுவில் இருந்த விமல் வீரவன்ச கட்டாயப்படுத்திய போதும் பீடாதிபதிகள் அதற்கு சம்மதிக்கவில்லை.
தேவையான மாற்றங்களை செய்வதாக அரசு நமக்கு கூறி இருக்கின்றது. அத்துடன் கல்வியில் சீர்திருத்தம் அவசியம் என்றும் அவர்கள் முகத்திற்கே சொல்லி விட்டார்கள். அதன் ஒரு கட்டம்தான் திருத்தம் அடுத்த வருடமாகியுள்ளது போலும்.





