நஜீப்
நன்றி:11.01.2025 ஞாயிறு தினக்குரல்
நமக்கு வந்த ஆபூர்வமானதும் ஆதாரபூர்மானதுமான தகவல் இது. ரஸ்யா-உக்ரைன் போரில் நம்மவர்கள் இருபக்கத்திலும் நின்று போராடி வருகின்றார்கள். இதில் சிங்களவர் முஸ்லிம்கள் தமிழர்களும் இருக்கின்றார்கள்.
குளியாப்பிட்டியவைச் சேர்ந்த சந்தன சோமசிரி குமாரலங்கா (முன்னாள் படைவீரர்) இந்தத் தகவல்களை பகிரங்கப்படுத்தியுள்ளார்.
கண்டி-பந்து அனுராதபுரம்-அஜித், காலி-ரத்னாயக, கம்பஹ-சில்வா நாரம்மல-விக்கிரமசிங்ஹ, போயகொட-மல்லிகே மற்றும் ஜமால்டீன் என்று பலரது நாமங்களையும் அவர் சுட்டிக்காட்டினார். பலர் பலியாகிவிட்டனர்.
எனது ஒப்பந்த காலம் முடிய நாடுக்கு வந்து விட்டேன். இரு அணிகளிலும் இருந்தவர்கள் சந்தித்து சிங்களத்தில் உரையாடியதையும் சோமசிரி சுட்டிக்காட்டினார்.
ரஸ்யா பத்திரிகையில் தனது போட்டோ முதல் பக்கத்தில் வந்திருந்ததையும் சோமசிரி காண்பித்தார். போர் களத்தில் இலங்கையர் பலரை சந்தித்தாகவும் அவர் கூறுகின்றார். நம்மவர்கள் ஆயிரக்கணக்கில்; இருக்கின்றார்கள்.
குடும்பத்துக்கு சோறுபோட நடக்கும் தியாகத்தைப் பார்த்தீர்களா? சம்பளம் 800000ரூபா வரைதான்.





