நஜீப்
நன்றி 07.12.2025 ஞாயிறு தினக்குரல்
சஜித் அரசியல் தலைமைக்குப் பொறுத்தமில்லாத ஒரு மனிதன். இப்படி ஒரு தொலைக்காட்சி உரையாடலில் ஐக்கிய தேசியக் கட்சி செயலாளர் தலதா அதுகோரல பகிரங்கமாக சாடி இருக்கின்றார்.
இந்த வார்த்தைக்குப் பின்னர் ஐதேகவும் ஐமச.வும் அதாவது ரணிலும் சஜித்தும் இணைவு என்பது கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லை என்பது உறுதி.
மேலும் கட்சியின் இரண்டாம் இடத்தில் ரணில் சஜித்தை அமர்த்தினார். அதற்குப் பின்னர் மேலே செல்வது அவரது ஆளுமையைப் பொறுத்த விவகாரம். நாம் அதற்கு ஒன்றும் பண்ண முடியாது என்றும் தலதா அந்த நிகழ்ச்சியில் சுட்டிக்காட்டி இருந்தார்.
ராஜபக்ஸாக்களுடன் மேடையில் அமர முடியாது. ஆனால் வேறு கொடுக்கல் வாங்கல் பண்ணலாம் எனவும் அவர் சஜித்தை கிண்டலடித்திருந்தார்.
அவரது இந்தக் கருத்து இனி வரும் வருகின்ற நாட்களில் வைரலாகும் என்பதனை நாம் முன்கூட்டியே சொல்லி வைக்கின்றோம்.





