டெல்லி ‛அட்டாக்’கின் பின்னணியில் பாகிஸ்தான்!

டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் கார் வெடித்த வழக்கில் 13 பேர் பலியாகினர். இதன் பின்னணியில் பாகிஸ்தான்  சதித்திட்டம் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் டெல்லி தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம் உள்ளதாக அந்த நாட்டை சேர்ந்த பத்திரிகையாளர் தெரிவித்து இருப்பது அதிக கவனம் பெற்றுள்ளது.

டெல்லி செங்கோட்டை அருகே மெட்ரோ ரயில் நிலையத்தில் 1வது நுழைவு வாயிலில் நேற்று முன்தினம் மாலை 6.52 மணிக்கு சென்று கொண்டிருந்த ஹூண்டாய் ஐ20 கார் வெடித்து சிதறியது. இதில் 13 வாகனங்கள் எரிந்த நிலையில் 13 பேர் பலியாகினர்.

சம்பவத்தை நேரில் பார்த்தவர் சொன்ன ஷாக் தகவல்!”

டெல்லி போலீசாருடன், என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமையும் விசாரணையை தொடங்கி உள்ளது. வெடித்து சிதறிய ஹூண்டாய் ஐ20 காரை ஜம்மு காஷ்மீரை சேர்ந்த டாக்டர் உமர் ஓட்டி சென்று இந்த கொடூர தாக்குதலை நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது. காரில் டெட்டனேட்டர், அம்மோனியம் நைட்ரேட் எரிபொருள் எண்ணெய் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி உமர் வெடிக்க செய்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இந்த தாக்குதலின் பின்னணியில் ஜம்மு காஷ்மீரில் கைதான டாக்டர் அடீல் அகமது ராதர், பரிதாபாத்தில் டாக்டர் முஜாமில் ஷகீல் உள்ளிட்டவர்களுக்கு தொடர்பு உள்ளதாக கூறபப்டுகிறது. இவர்கள் 2 பேர் கைதானதால் தான் உமர், இந்த தாக்குதலை நடத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இவர்களுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

“நாடு முழுவதும் உச்சக்கட்ட எச்சரிக்கை!

ஒரே நாளில் டெர்மினேஷன் மெயிலை அனுப்பிய பிரபல நிறுவனம் இந்த பயங்கரவாத அமைப்பின் நிறுவன தலைவராக மசூத் அசார் உள்ளார். இவர் நம் நாட்டில் பல்வேறு தாக்குதல்களை நடத்தி உள்ளார். 2019ல் ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் காரில் சென்று தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் இறந்தனர்.

தற்போதைய டெல்லி தாக்குதலிலும் கார் ஓட்டி சென்றதாக கூறப்படும் உமர் புல்வாமா பகுதியை சேர்ந்தவர். இதனால் தான் இந்த தாக்குதலின் பின்னணியில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இப்படியான சூழலில் தான் தற்போது பாகிஸ்தான் பத்திரிகையாளர் தாஹா சித்திக் எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு செய்துள்ளார்.

அதில் டெல்லி தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம் உள்ளதாக கூறியுள்ளார். இதுபற்றி அவர் ‛‛கடந்த 24 மணிநேரத்தில் டெல்லியில் பயங்கரவாதம் நடந்துள்ளது. இஸ்லாமாபாத்திலும் பயங்கரவாதம் நடந்துள்ளது

 “சரியாக 6.52 மணிக்கு.. சிக்னலில் மெதுவாக வந்த கார் வெடித்தது.. டெல்லி போலீஸ் கமிஷனர் தகவல்!” பாகிஸ்தான் ராணுவம் தனது தற்கொலை படையினரை தனது சொத்தாக கூறி வரும்போது இருநகரங்களிலும் தாக்குதல் நடந்துள்ளது. பாகிஸ்தான் ஜெனரல்கள் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விவகாரங்களில் பயங்கரவாதத்தை பயன்படுத்துவதை நிறுத்தும் வரை தெற்காசியாவில் அமைதி என்பது இருக்காது” என தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் டெல்லி தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம் இருப்பதாக வெளிப்படையாக அறிவித்துள்ளார். தாஹா சித்திக் பாகிஸ்தானில் பத்திரிகையாளராக இருந்தாலும் கூட தற்போது அவர் அங்கு இல்லை. பாரீஸ் நகரில் உள்ளதாக கூறப்படுகிறது.

Previous Story

BBC Tamil TV News

Next Story

"பாகிஸ்தானில் போர் வெடித்தது.."