நஜீப்
நன்றி:09.11.2025 ஞாயிறு தினக்குரல்.
2026 மாகாணசபைத் தேர்தலில் சஜித்தின் ஐமச.யுடன் இணைந்து போட்டியிட ஐதேக.வில் உள்ள பலர் எதிர்பார்க்கின்றார்கள். ஆனால் சஜித் தனது கூட்டணியில் ஏற்கெனவே இருந்தவர்களுக்கு மட்டுமே வேட்பாளர் வாய்ப்பு.
ஐதேக.வுடன் கூட்டுக்கு வாய்ப்பில்லை என தன்னுடன் இருக்கின்ற ஒரு சிறுபான்மை அரசியல்வாதியிடம் சஜித் கூறி இருக்கின்றார்.
தேர்தல் முடிவில் வருகின்ற பெறுபேருகளை வைத்து சபைகளை அமைக்கின்ற நிலை வந்தால் கூட்டணி போட்டு மாகாணசபைகளை அமைப்பது பற்றிச் சிந்திக்கலாம் என்றும் சஜித் சொல்லி இருக்கின்றார். இது நல்ல முடிவு.

அதே நேரம் நாமல் தலைமையில் மொட்டுக் கட்சியும் ஒரு வலுவான அணியைக் களமிறக்க தயாராகி வருகின்றது. மேலும் சுதந்திரக் கட்சியும் ஒரு கூட்டணிக்குத் தலைமைத்துவம் கொடுக்க இருப்பது பற்றிய கதைகளும் வருகின்றன.
இதிலிருந்து தேர்தலில் எதிரணியில் பல குழுக்கள் என்பது உறுதி.!





