நஜீப்
நன்றி 26.10.2025 ஞாயிறு தினக்குரல்
இந்த நாட்களில் தலைவரின் நடவடிக்கைகளும் பேச்சுக்களும் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது.
அஸ்ரஃப் காலத்திலிருந்த உணர்வுகள் இப்போது கட்சியில் கிடையாது. தலைவரின் பேச்சுக்கள் செயல்பாடுகளைப் பார்த்து கட்சிக்காரர்களும் அதிலுள்ள சமயத்தலைவர்களும்கூட கைகொட்டி சிரித்து மகிழ்வதை நாம் பார்க்கின்றோம். இது எந்தளவுக்கு ஏற்புடையது என்று தெரியாது.
ஐதேக. மாநாட்டிலும், கல்முனை-சாய்ந்தமருதுவிலும் தலைவர் செயலும் பேச்சுக்களும் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்துக்கு இலக்காகி வருகின்றது. ஆனால் கட்சி அவற்றை கண்டு கொள்ளாது.
காரணம் தலைவர்தான் இப்போது கட்சி என்ற நிலை அங்கு. பதவிகளில் உள்ள அனைவருமே அவர் கையாட்கள். பிரதேசவாதம் தலைமைக்கு நல்ல வேலி.
தலைவர் அஸ்ரஃப் காலத்திலே ஹக்கீமின் கட்சி விரோத செயல்பாடுகளுக்கு எதிராக கண்டியில் அன்று இருந்த மக்கள் பிரதிநிதிகள் மு.கா. நலன் காப்புப்பிரிவு என்ற ஒன்றை வைத்திருந்தனர். அந்த ஆவணங்களை நமக்கும் பார்க்க முடிந்தது.





