நஜீப்
நன்றி 26.10.2025 ஞாயிறு தினக்குரல்
தனக்குப் பாதாள உலகத்தாரால் குறிப்பாக மிதிகம ருவனால் கொலை அச்சுறுத்தல் இருக்கின்றது. அதனால் பாதுகாப்பு வேண்டும் என பொலிஸ் மா அதிபரிடம் கேட்டிருந்தார். ஆனால் கிடைத்திருக்கவில்லை.
கொலை செய்யப்பட்ட தவிசாளர் இந்த முறை சஜித் அணியில் போட்டியிட்டு வெலிகம-மிதிகம வட்டாரத்தில் 1943 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். இவர் ஒரு பதிவு செய்யப்பட்ட குற்றவாளி. அதன் இலக்கம் பீ-1305-2025.

இவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனைகள் பல. ஆறு மாதங்கள் இரண்டு வருடங்கள் என இரு தண்டனைகளும் அடங்கும். மேலும் 2025.10.30, 2025.11.14ம் திகதிகளிலும் வழக்குகள் நிலுவையில் இருந்தன.

இப்படி டசன் வரையிலான கொலை கொள்ளை குற்றச்சாட்டுக்கள். 2018ல் ஆடைதொழிற்சாலைக்கு செல்லும் இலக்க 60-2074 தனியர் வசுவண்டிக்குள் புகுந்த ஏழை பெண்களின் இலட்சக் கணக்கான நகைகளைக் கொள்ளையடித்த வழக்கும் இதில் இருந்தது.
என்னதான் இருந்தாலும் கொலையை நியாயப்படுத்த முடியாது.





