உடல் எடையை விரைவாக அதிகரிக்க …..!

நம்மில் சிலர் உடல் எடையை கூட்டுவதற்கு ஏதோதோ முயற்சிகளை எல்லாம் எடுப்பார்கள். அவர்களில் ஒருவர் நீங்கள் என்றால், இயற்கையான இந்த குறிப்புகளை சரியாக செய்து விரைவாக உடல் எடையை கூட்டுங்கள்.

பாதாம்பாதாம் பருப்பில் நரம்புகளை வலுப்படுத்தும் ஆற்றல் உண்டு. இதில் வைட்டமின் இ சத்து, ஃப்ளேவனாயிட்ஸ், எல் கார்னிடைன் அமினோ அமிலம் மற்றும் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளன.

உடல் எடையை கூட்டும் முயற்சியில் இருப்பவர்கள் தினமும் காலை மாலை என இரு வேளைகளிலும் இதனை சாப்பிட்டு வருவது, நல்ல பலனை கொடுக்கும். பாஸ்பரஸ் தாதும் இதில் இருக்கிறது.

வேர்க்கடலைஉடல் எடையைக் கூட்டும் முயற்சியில் இருப்பவர்கள் முக்கியமாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று என்றால் வேர்க்கடலை. நல்ல கொழுப்பு நிறைந்துள்ள வேர்க்கடலையில் பாதாம் பருப்புக்கு இணையான சத்துக்கள் குவிந்து கிடக்கின்றன.

பிஸ்தாவைட்டமின்கள் பி, இ ஊட்டசத்துக்கள் இருக்கும் பிஸ்தாவில் தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீஷியம் உள்ளிட்டவையும் உள்ளன. இதனை தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். நாள்தோறும் மூன்று முதல் 4 பிஸ்தா பருப்புகளை சாப்பிடுங்கள்

உலர் திராட்சைஉலர் திராட்சை ஆன்டிஆக்ஸிடன்டுகளும், உடலுக்கு தேவையான கலோரிகளையும் கொண்டிருக்கிறது. இரும்புச் சத்துகளின் குவியலாக இருக்கும் இதனை உடல் எடையை கூட்டுபவர்களுக்கு சிறந்த ஒன்று. சரியான அளவில் எடுத்து உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, உங்களின் உடல் எடை விரைவாக அதிகரிக்கும்.

வால்நட் : உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு மன அழுத்தங்கள் இருக்கக்கூடாது. ப்ரீயாக மனதை வைத்திருக்க வேண்டும். இதற்கு மூளை புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க வேண்டிய உணவை சாப்பிட வேண்டும். அந்தவகையில் வால் நட் சிறந்தது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் மன அழுத்தங்கள் ஏற்படாது. உடல் எடையும் கூடும்.

Previous Story

மீரிகம -குருநாகல் அதிவேக நெடுஞ்சாலை OPEN 15.01.2022 

Next Story

யூனுஸ் பரகத்