குரல் தரும் குறுஞ்செய்திகள்
நஜீப்
05.10.2025 நன்றி ஞாயிறு தினக்குரல்
1.ஐதேக-ஐமச இணைந்தால் அப்பனாக ரணிலும் மகனாக சஜித்தும் நடிக்கனும் என்றதை மகன் மறுத்ததால் கதையே குப்பையிலாம்!
2.ராஜாக்களின் பாதாள மற்றும் போதை வியாபாரிகள் உறவுகளை மூடிமறைக்க தயாரிகிற கதைகள் பிறப்பிலே ஊனமாம்!
3.காசாவுக்கு மு.கா.விட்ட நிவாரணக் கப்பல் தலைவர் சீரிய வேகத்தில் தொலைந்து போனதாம்! தொண்டர்களே பாருங்கள்!

4.எதிரணியில் இருக்கும் ஹீரோவுக்கான விருது சாமர சம்பத்துக்கும் கோமாளிக்கான விருது பெறுபவர் மனநல டாக்டர் சான்றிதழ் பெறனுமாம்-ஸ்ரீ.ல.கார்டியன் நியூஸ்.தகவல்!
5.காசுக்காக குரைக்கும் முன்னாள் செஞ்சட்டை ஜனாதிபதி வேட்பாளர் நந்தமானவர் பெரும் சிக்கலில் மாட்டியாம்!
6.இலங்கை-சீனா இராஜதந்திர நகர்வில் ஜனாதிபதியை விட தீர்க்கமான சக்தி ஜேவிபி. செயலாளர் டில்வின்தான்-கட்டுரையாளன்.
7.கச்சதீவை மீட்க அணுரவுடன் போர் பிரகடனம் செய்த தமிழகத் தளபதி விஜே கரூரில் தலைதெறிக்க ஓடி சாதனையாம்!





