உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியில் அரசியல் ?

1000 வது நாளைக் குறிக்கும் பிரார்த்தனை

 

இலங்கையில் உள்ள அனைத்து கத்தோலிக்க ஆயர்கள், அருட் தந்தையர்கள் மற்றும் பொது மக்கள் ஜனவரி 14 ஆம் திகதியன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 1000 வது நாளைக் குறிக்கும் பிரார்த்தனை சேவையில் ஒன்று கூடுவார்கள் என்று கொழும்பு பேராயர் முகநுாலில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள அனைத்து கத்தோலிக்க ஆயர்களும், குருமார்களும், கன்னியாஸ்திரிகளும், பொது மக்களும் ஜனவரி 14 வெள்ளிக்கிழமையன்று தெவத்தே பசிலிக்காவில் பிரார்த்தனை ஆராதனைக்காக ஒன்றுகூடுவார்கள் என கொழும்பு பேராயர் முகநூல் பக்கத்தின் ஊடாக காலி ஆயர் ரேமண்ட் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் விடயங்கள் முன்னோக்கிச் செல்லவில்லை என்பது குறித்து அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

அத்துடன் பாதிக்கப்பட்டவர்கள் வெளிப்படைத்தன்மையையும் நீதியையும் விரும்புகிறார்கள் என்று ஆயர் ரேமண்ட் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இந்த தாக்குதல்களுக்கு அரசியல் அனுசரணை உள்ளதா என்பதை கண்டறிய மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் கத்தோலிக்க சபை கோரிக்கை விடுத்துள்ளது.

Previous Story

மனக் கசப்பின்றிய எமது உயிர் தோழன் சீனா- பிரதமர் புகழாரம்

Next Story

விமல் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை!