பாகிஸ்தான் தோளில் கையைப்போட்ட அமெரிக்கா..

பச்சை துரோகம்..

அந்த 90 நிமிடம்..

வெள்ளை மாளிகை கிடுகிடு!

வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் நடந்த சந்திப்பு ஒன்று இந்தியாவின் கவனத்தை ஈர்த்து உள்ளது. 90 நிமிடங்கள் நடந்த அந்த சந்திப்பு..

உலக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். அதோடு இந்தியாவிற்கும் கடுமையான சில பின்னடைவுகள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை ஓவல் அலுவலகத்தில் வியாழக்கிழமை சந்தித்தனர்.

சுமார் 90 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில், இரு நாட்டுத் தலைவர்களும் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். அமெரிக்காவும் – பாகிஸ்தானும் கடந்த சில வருடங்களாக நெருக்கமாகி வருகின்றன.

இரண்டு நாடுகளும் மேலும் நெருக்கமாக விதமாக இந்த சந்திப்பு நடந்து உள்ளது. அமெரிக்க அரசும், பாகிஸ்தான் அரசும் ஒருமித்த குரலில் இதை, மிக முக்கியமான சந்திப்பு, பாதுகாப்பு தொடர்பான சந்திப்பு, ஒப்பந்தங்களை மேற்கொள்ள போகும் சந்திப்பு என்று குறிப்பிட்டு உள்ளனர்.

இதில் உள்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் துணை அதிபர் ஜே டி வான்ஸ் ஆகியோர் இடம்பெற்று இருந்ததும் கவனம் பெற்றுள்ளது. மார்கோ ரூபியோதான் கடந்த வாரம் இந்தியா மீது பொருளாதார தடைகளை விதிக்கலாம் என்று எச்சரித்தார்.

முக்கியமாக இரண்டு நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான உறவின் புதிய அத்தியாயத்தை அடையும் விதமாக இந்த சந்திப்பு நடந்து உள்ளதாக உலக அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம், அமெரிக்கா வெள்ளை மாளிகை வட்டாரங்கள் இதை பற்றி வெளியிட்டுள்ள சில தகவல்கள்தான்.

இந்த சந்திப்பு இரண்டு நாட்டு உறவு பற்றி மட்டுமில்லாமல் உலக அரசியல் தொடர்பாகவும் அமைந்தது. தீவிரவாத ஒழிப்பு, எல்லை பிரச்சனை, முதலீடுகள், வர்த்தகம் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாகவும் இதில் ஆலோசனை செய்யப்பட்டதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கூறுகின்றன.

அதாவது அமெரிக்கா – பாகிஸ்தான் கூடுதல் வர்த்தகம் செய்ய போகிறது. அமெரிக்கா பாகிஸ்தானில் முதலீடும் செய்ய போகிறது. இது இந்தியாவிற்கு எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது. ஆசியாவில் பிடி தளரும்: இந்தியா ஆசியாவில் அமெரிக்காவிற்கு இந்தியா மட்டுமே மிக நெருக்கமான நட்பு நாடாக இருந்தது. பாகிஸ்தான், இலங்கை எல்லாம் சீனாவிற்கு நெருக்கமாக இருந்தது.

இதில் பாகிஸ்தான் இப்போது அமெரிக்காவிற்கு நெருக்கமாகிவிட்டது. மாறாக இந்தியா அமெரிக்காவுடன் நட்பை இழக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. ஏற்கனவே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் மேற்கொண்ட சில முடிவுகளால் இந்தியா அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

ஒரு காலத்தில் “அண்ணன் – தம்பி ” என்று வர்ணிக்கப்பட்ட இந்தியா-அமெரிக்க உறவு, தற்போது பெரும் சவால்களை சந்தித்து வருகிறது. டிரம்பின் நடவடிக்கைகள் இந்தியாவின் முதுகில் குத்தியதற்கு ஒப்பாக இருப்பதாக பல இந்தியர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்கா இந்தியாவிற்கு எதிராக கடுமையான வரிகளை விதித்து உள்ளது. கடந்த ஜூலை மாதம், இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 25% வரி விதித்தது. அதைத் தொடர்ந்து, ஒரு வாரத்திற்குப் பிறகு மேலும் 25% வரி விதித்து, ரஷ்ய எண்ணெயை இந்தியா தொடர்ந்து வாங்குவதைக் காரணமாகக் கூறியது.

இந்த வரி விதிப்புகள், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளைச் சிக்கலாக்கியது. இதனால் இரண்டு நாட்டு உறவு மேலும் பாதித்து உள்ளது. டிரம்ப் இந்தியா உறவு விரிசல் அதோடு கடந்த வாரம் புதிய H-1B விசா விண்ணப்பங்களுக்கு 100,000 டாலர் கட்டணத்தை டிரம்ப் அறிவித்துள்ளார்.

இந்த விசாக்களில் முக்கால்வாசி இந்தியர்கள் பெறுவதால், இந்த முடிவு இந்திய தொழில்நுட்ப ஊழியர்களையும் அவர்களது குடும்பங்களையும் மிகக் கடுமையாகப் பாதிக்கும். அமெரிக்காவின் இந்த முடிவுகள், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத் துறை மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

இந்தியாவின் கண்ணோட்டத்தில், இந்த நடவடிக்கைகள் ஒரு நம்பிக்கைத் துரோகமாகவும், இருதரப்பு உறவுகளில் விரிசலை ஏற்படுத்தக்கூடியதாகவும் பார்க்கப்படுகின்றன. இப்போது இதெல்லாம் போக பாகிஸ்தான் உடனும் டிரம்ப் நெருக்கம் காட்டுவது இந்தியாவிற்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Previous Story

ශ්‍රී ලංකා - ඉන්දියා 18 වන T20I තරගය | Sri Lanka Vs India 18th T20I Match| 25/9/26

Next Story

Lesson 936