நஜீப்
நன்றி 21.09.2025 ஞாயிறு தினக்குரல்
நாம் ஒரு முறை கண்டியில் இருக்கும் ஜனாதிபதி மாளிகையில் சந்திரிக்காவை அவரது அழைப்பில் சந்தித்தோம். அது ஒரு தேர்தல் காலம்.
அப்போது கட்சியில் ரத்வத்தை ஜனரஞ்சகமாக இருந்தார்.அவர் சந்திரிகாவின் நெருக்கமான உறவினர். அன்று அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற கேள்வியும் இருந்தது.
அது பற்றி கேட்க அப்போது சந்திரிக்கா பதில் தரவிலை. தேர்தலில் தம்முடன் இணைந்து செயல்படுமாறு அவர் எமக்கு வேண்டுகோள் விடுத்தார்.
ரத்வத்தை உடதலவின்னை படுகொலையால் மூக்குடைபட்டு வாய்ப்பை இழந்தார். அதனால் களம் மஹிந்தவுக்கு வாய்ப்பானது.
தேர்தலில் வெற்றி பெற்ற மஹிந்தாவுக்கு வாழ்த்த சந்திரிக்கா அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள மறுமுனையில் மிகவும் மோசமான வார்த்தையில் மஹிந்த சந்திரிகாவைத் திட்டித் தள்ளி இருக்கின்றார்.
இதனை சில தினங்களுக்கு முன் அவரே கூறியதுடன் மஹிந்த நாடகங்களை மக்கள் நம்பாதீர்கள் எனவும் சந்திரிகா எச்சரிக்கின்றார்.