நஜீப்
நன்றி 21.09.2025 ஞாயிறு தினக்குரல்
பிரபலமான ரகர் வீரர் தாஜூதீன் படுகொலைகள் தொடர்பான பல ஆவணங்கள் அழிக்கப்பட்டு அதனுடன் தொடர்புடடைய சிலரும் கொலை செய்யப்பட்டு அல்லது காணாமலாக்கப்பட்டுள்ள பின்னணியில் இந்த வழக்கை முறையாக முன்னெடுத்துச் செல்வதில் நிறையவே சிக்கல்கள் நெருக்கடிகள் இருந்து வருகின்றன.
ஆனால் இதற்கு நல்லதொரு தீர்வைப் பெற்றுத் கொள்வதற்கான ஒரு அரசியல் பின்னணி தற்போது நாட்டில் இருந்து வருவதால் பலரது ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிகை இந்த வழக்கில் ஏற்பட்டிருக்கின்றது.
மீண்டும் சடலம் தோண்டப்பட இருப்பதாகவும் அந்நாட்களில் பொலிஸ் அதிகாரிகளுடன் நடந்த உரையாடல்கள். சிரிலிய டிபேன்டர் வாகனம் பற்றி தகவல்களும் கிடைத்திருக்கின்றன.
ராஜபக்ஸாக்களின் புதல்வர்கள் மற்று மனைவி சிரந்தியும் இதில் தொடர்பட்டிருப்பதாக பரவலான கதைகள் இருந்து வருவதுடன் விளையாட்டுக் கழகம் மற்றும் ஒரு காதல் விவகாரம் இதன் பின்னணி என்றும் சொல்லப்படுகின்றது.