பறிபோன ராஜாக்கள் கோட்டை!

நஜீப்

நன்றி 14.09.2025 ஞாயிறு தினக்குரல்

என்பிபி. முன்னாள் ஆட்சியாளர்கள் அனுபவிக்கும் அசாதாரண சலுகைகளை இல்லாமல் செய்வது பற்றி தனது தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லி இருந்ததுஅத்துடன் மக்கள் சொத்துக்களை கொள்ளையடித்தவர்களுக்குத் தண்டணை வழங்குவது என்று கொடுத்திருந்த வாக்குறுதிகளையும் இப்போது அமுல்படுத்தி வருகின்றது.

அதற்கான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதன் ஓரங்கமாக  சில தினங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்ற ஜனாதிபதிகள் அவர்களது மனைவிமார் பெற்றுவந்த சலுகைகளுக்கும் ஆப்பு வைக்கப்பட்டிருக்கின்றது.

அதற்காக நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பிரேரணை 151-1க்கு என்ற எண்ணிக்கையில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. எதிரணியினர் இந்த வாக்களிப்பை பகிஸ்கரித்திருக்கின்றனர். சாமர சம்பத் மட்டும் எதிராக வாக்களித்திருந்தார்.

அதனால் அவர் முதுகொலும்புள்ள ஒரே மனிதன் எனவும் பாராட்டுக்கள். நாடாளுமன்றத்தில் இருக்கும் சிறுபான்மைக் கட்சிகள் கூட பிரேரனைக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Story

பொறுப்புள்ள தலைவனா நீ? விஜய் மீது முதல் வழக்கு!

Next Story

வத்தேகம:உரிமங்கள் இல்லாத 2 வாகனங்கள் !