நஜீப்
நன்றி 14.09.2025 ஞாயிறு தினக்குரல்
என்பிபி. ஆளும்தரப்பு கொரோடா பிமல் ரத்நாயக்க நாடாளுமன்ற விவாதத்தின் போது உச்சரித்த லபாய்-சிப்பாய் வார்த்தை தூசன வார்த்தை என்று சொல்லி எதிரணியினர் ரகளை பண்ணிக் கொண்டிருந்தனர்.
இது அவர்கள் திட்டமிட்டு தற்போது நாடாளுமன்ற அமர்வுகளைத் குழப்புவதற்காக மேற்கொண்டு வருகின்ற நிகழ்ச்சி நிரலில் ஓரங்கமே.
இந்த நாடாளுமன்றத்தில் இதற்கு முன்னர் பள்ளி மாணவர்களை பார்வையாளர் அரங்கில் வைத்துக் கொண்டே உறுப்பினர்கள் எப்படி எல்லாம் அப்பட்டமான கடும் தூசன வார்த்தைகளில் பேசி இருக்கின்றார்கள் என்பதனை நடுநிலையாக இருந்து பொதுமக்கள் மதிப்பீடு செய்து பார்க்க வேண்டும்.
நாடாளுமன்றத்தை குழப்பி அடிக்கின்ற இந்த ஏற்பாட்டில் தயாசிரியே கோட்பாதாரா வழி நடாத்தி வருவது இப்போது பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. பலயீனமான எதிர்க்கட்சித் தலைமையின் முன்னால் தயாசிரி ஹீரோவாக முயல்கின்றார்.
ஆனால் ஒரு பாமரனாக இருந்தாலும் சம்பத்தான் எதிரணியின் இன்று இருக்கும் உண்மையான கதாநாயகன்.