முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹேல்பத்தர பத்மே இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களின் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
இலங்கையில் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்த பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹேல்பத்தர பத்மே, சமீபத்தில் இந்தோனேசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
பகிரப்படும் புகைப்படங்கள்
தற்போது, அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு அவர் உட்பட கைது செய்யப்பட்ட 5 பாதாள உலகப் புள்ளிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
இவ்வாறிருக்க, கெஹேல்பத்தர பத்மேவுடன் தொடர்புடைய பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதி ஒருவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதேவேளை, கெஹேல்பத்தர பத்மேவுடன் தொடர்பில் உள்ள முக்கிய புள்ளிகளின் பட்டியலை விரைவில் வெளியிடவுள்ளதாக தற்போதைய அரசாங்கமும் குறிப்பிட்டு வருகின்றது.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் கெஹேல்பத்தர பத்மே இருப்பது போன்ற புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.