நேபாளத்தில் உச்சக்கட்ட பதற்றம்..

போராட்டக்காரர்கள் போலீசார்  மோதலில் ஒருவர் பலி!

Nepal Protests News Live: 19 Killed In Protests Over Social Media Ban, Home Minister Offers To Quit - News18

நேபாளத்தில் சமீபத்தில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் செயல்பட அனுமதி ரத்து செய்யப்பட்டது. இந்த தடையை நீக்க வேண்டும் என்று அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டம் வன்முறையாக வெடித்ததையடுத்து, அதை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். நேபாளம் தற்போது கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியின் கீழ் இருக்கிறது.

ஆனால் வழக்கமாக கம்யூனிஸ்ட்கள், இடதுசாரி ஆதரவாளர்கள், ஜனநாயகவாதிகள் ஆட்சியில் இருக்கும் நாடுகளில், அந்த அரசை கவிழ்ப்பதற்கு சர்வதேச அளவில் வலதுசாரி நாடுகளின் தலைமையில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம் என விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

A protester falls down during clashes with riot police outside the parliament building in Kathmandu, Nepal, Monday, Sept. 8, 2025. (AP Photo/Niranjan Shrestha)

இந்த விமர்சனங்களை உண்மையாக்குவதை போல நேபாள அரசுக்கு எதிராக தற்போது போராட்டங்கள் அதிகரித்திருக்கின்றன. எனவே அந்த வகையில், தங்கள் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் தூண்டிவிடப்பட்டிருக்கின்றனர் என நேபாள அரசு குற்றம்சாட்டியிருக்கிறது.

குறிப்பாக கிளர்ச்சியாளர்கள், மீண்டும் மன்னராட்சி வேண்டும் என்கிற பழைய பல்லக்கை தூக்கி சுமந்து வருகின்றனர். இப்படியான பழமைவாத சித்தாந்தத்திற்கு எதிராக தங்கள் அரசு கடுமையான சித்தாந்த சண்டையை செய்து வருகிறது என அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில், நேபாளத்தில் இயங்கும் சோஷியல் மீடியா கணக்குகளுக்கு அரசு சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதாவது ஒவ்வொரு சோஷியல் மீடியா நிறுவனத்தின் தினசரி நடவடிக்கைகளை கண்காணிக்க, நேபாள நாட்டை சேர்ந்த நபர் ஒருவரை நிறுவனம் நியமிக்க வேண்டும்.

நியமிக்கப்பட்ட நபர், வாராவாரம் நாட்டிற்கு எதிராக சமூக வலைதளத்தில் நடக்கும் விவாதங்களை கவனித்து தங்களுக்கு வழங்குவார்கள் என்று அரசு கூறியிருந்தது. இதற்காக 7 நாட்கள் அவகாசத்தையும் கொடுத்திருந்தது.

இதனை Tik Tok, Viber ஆகிய இரு நிறுவனங்கள் சரியாக மட்டுமே செய்தன. எனவே மீதமிருக்கும் You Tube, Twitter துவங்கி Linked in, What’s App வரை மொத்தமாக 26 நிறுவனங்களின் சேவையை நேற்று முதல் நேபாள அரசு நிறுத்தியது. இதனை ஏற்றுக்கொள்ளாத கிளர்ச்சியாளர்கள் தற்போது போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

Nepal News Today | Tense Protests In Nepal, Protesters Burn Effigy of Nepal PM Oli - YouTube

போராட்டம் ஒரு கட்டத்தில் வன்முறையாக வெடித்திருக்கிறது. நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயல்வது, போலீசார் மீது கல் வீசுவது, துப்பாகிகளை பயன்படுத்துவது என அத்துமீறி செல்லவே கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த போலீசும், ராணுவமும் அதிரடியில் இறங்கியது.

இதனால் ஏற்பட்ட மோதலில் கிளர்ச்சியாளர்கள் குரூப்பை சேர்ந்த ஒருவர் உயிரிழந்திருக்கிறார். இதனால் நேபாளத்தில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. பதற்றத்தை தணிக்க அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருக்கிறது. மேலும் போராட்டங்களை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தி வருகின்றனர்.

Previous Story

இஸ்ரேல் மீது ஹவுதி ட்ரோன் தாக்குதல்!

Next Story

කඳානේ අයිස් සිද්ධියට පොලිස් ප්‍රභලයෙක් මාට්ටු