நஜீப்
(நன்றி: 07.09.2025 ஞாயிறு தினக்குரல்)
நீண்டகாலமாக மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தாது அதற்கு நொண்டிக் காரணங்களைச் சொல்லி வந்தவர்கள் இன்று அரசு உடனடியாக அந்தத் தேர்தலை நடத்த வேண்டும் என்று கேட்கின்றார்கள்.
ஆனால் இதே அட்கள்தான் இந்த மாகாணசபைத் தேர்தல் நடத்த முடியாது ஆப்பையும் வைத்துவிட்டுப் போனார்கள். அந்த ஆப்பு முதலில் அகற்றப்பட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை என்பிபி. அரசு செய்து வருகின்றது.

இந்தத் தேர்தலை நடாத்துவதில் எதிரணியினருக்கு உண்மையான ஆர்வம் இருந்தால் அரசுடன் இணைந்து இவர்கள் பழைய விகிதாசார முறையில் தேர்தலை நடத்த உந்துதல்களை-பிரேரணைகளைக் கொண்டுவர முடியும்.
தேர்தலை நடத்துவது என்ற விடயத்தில் அரசு உறுதியாக இருக்கின்றது. அவர்கள் அதனை அடித்துச் சொல்லியும் வருகின்றார்கள்.
எனவே நமக்கு கிடைக்கின்ற தகவல்களின்படி வரும் (2026.11.07) வரவு செலவுத் திட்டத்தில் மாகாண சபைத் தேர்தலுக்குத் தேவையான நிதி ஒதுக்கப்பட இருக்கின்றது.





