ஐநா அலுவலகத்தை  கட்டுப்பாட்டில் எடுத்தது ஹவுதி அமைப்பு! 

இது குறித்து ஏமனுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் தூதர் ஹான்ஸ் கிரண்ட்பெர்க் கூறுகையில், “ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் 11 ஐ.நா. ஊழியர்களை கைது செய்து வைத்திருக்கிறார்கள்.

சனா மற்றும் ஹோடைடாவில் ஐ.நா. ஊழியர்களை தன்னிச்சையாக கைது செய்ததையும், ஐ.நா. வளாகத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து, ஐ.நா.வின் சொத்துக்களை பறிமுதல் செய்ததையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

UN Yemen

இஸ்ரேல்-ஹமாஸ் போரில், ஹமாஸுக்கு ஆதரவாக செங்கடல் பகுதியில் இஸ்ரேலுக்கு செல்லும் சர்வதேச நாடுகளின் கப்பல்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அழித்து வந்தனர். மட்டுமல்லாது, வெளியலிருந்து இஸ்ரேலுக்குள் அவர்கள் தாக்குதல் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஹவுதி பிரதமரை இஸ்ரேல் போட்டு தள்ளியது. இதற்கு ஈரான் தவிர வேறு எந்த நாடுகளும் கண்டனம் தெரிவிக்கவில்லை. இப்படி இருக்கையில்தான் ஐநா அலுவலகத்தை ஹவுதிக்கள் கட்டுப்பாட்டில் எடுத்திருக்கின்றனர்.

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைது செய்து வைத்திருக்கும் தங்களது ஊழியர்க மீட்கும் பணியில் ஐநா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு வெற்றிகரமாக நடக்கும் என்பது சந்தேகம்தான்.

Previous Story

11 மாணவர்கள் கொலை! அதிர்ச்சிக்குள்ளாக்கும் உண்மைகள்- பொன்சேகா

Next Story

HAMZ:ABU UBIDA KILL