நஜீப்
நன்றி: 31.08.2025 ஞாயிறு தினக்குரல்
கடந்த வாரம் பூராவும் திரும்பிய பக்கம் எல்லா ரணில்… ரணில்… என்றுதான் செய்திகள் இருந்தன. சர்வதேச ஊடகங்கள் சிலவும் இது பற்றிப் பேசி இருந்தன.
இந்த ரணில் இசுவால் உற்சாக பானம் பருகியது போல எதிரணிக்கு ஒரு கிக் வந்ததும் உண்மை. இதன் யதார்த்த நிலை என்ன என்று பார்ப்போம்.
இந்த நாட்டில் இருக்கின்ற மக்கள் தொகையில் அறுபத்து ஐந்து சதவீதம் என்பிபி.க்கு ஆதரவாகவும் 35 சதவீதமானவர் எதிராகவும் விருப்பை பதிந்திருந்தனர்.
மற்றுமொரு கணக்குப்படி இந்த நாட்டில் பதினெட்டு (18) வயதுக்கு மேற்பட்டவர்கள் நூற்றி ஐம்பது (150) இலட்சம் பேர். இவர்களில் தொனூற்று எட்டு (98) இலட்சம் பேர் அரசு ஆதரவாலர்கள். ஐம்பத்தி இரண்டு இலட்சம் (52) பேர் அரச எதிர்ப்பாளர்கள்.
எனவே இவர்கள் அனைவரும் இன்று ஒரு கூட்டணியாம். எனவே ரணிலுக்கு ஆதரவாக கொழும்புக்கு ஒரு ஐநூறு பேர் வந்திருக்கின்றார்கள் என்றால் அது எந்தளவான கூட்டமாக இருக்க முடியும் என்று வாசகர்களான நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.