சீனா:சிலிண்டர் வெடித்து 18 பேர் பலி.

சீனாவின் வூலாங் மாவட்டத்தில், கேஸ் சிலிண்டர் ஒன்று வெடித்து சிதறியதில், 18 பேர் உயிரிழந்தனர்.. 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.. இதில் ஒருவர் சீரியஸாக இருக்கிறார்.. காயமடைந்த அனைவருக்கும் தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது.

கடந்த செப்டம்பர் மாதம், சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள லியோனிங் மாகாணம் டேலியன் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீ ப்பிடித்து கொண்டது.

அந்த அபார்ட்மென்ட்டில் ஒரு வீட்டில் விடிகாலையில் சமையல் கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

அபார்ட்மென்ட்

அது அபார்ட்மென்ட்டில் இருந்த மற்ற வீடுகளுக்கும் பரவியது.. இதனால் அவர்களும் தீவிபத்தில் சிக்கி கொண்டனர். இறுதியில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து, வீடுகளுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டனர்… எனினும் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.. 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

சிலிண்டர்

அதுபோலவே, கடந்த அக்டோபர் மாதம் இதே லியோனிங் மாகாணத்தில், ஷென்யாங் என்ற தெருவில் செயல்பட்டு வரும் ஓட்டல் திடீரென சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுவிட்டது.. வணிக வளாகங்கள் நிறைந்த அந்த தெருவில் ஏற்பட்ட தீ விபத்தில் மற்ற கட்டிடங்களும் சேதமடைந்தன.. 3 பேர் அந்த தீ விபத்தில் பலியான நிலையில், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்..

கட்டிடம்

இந்நிலையில் மீண்டும் ஒரு பயங்கரமான தீவிபத்து ஏற்பட்டுள்ளது.. வூலாங் மாவட்டம் சோங்கிங் நகரில் அரசு துணை மாவட்ட அலுவலகத்தில் ஏற்பட்ட இந்த விபத்தில் கட்டிடம் முழுமையாக இடிந்து விழுந்ததில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்… வூலாங் மாவட்டம் சோங்கிங் நகரில் அரசு துணை மாவட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான ஊழியர்களம் பணியாற்றி வருகிறார்கள்.

இடிபாடுகள்

மதிய உணவு இடைவேளையின் போது ஊழியர்கள் அங்குள்ள ரூமில் சாப்பிட்டு கொண்டிருந்தனர்… அப்போது அங்கிருந்த கேஸ் சிலிண்டர் திடீரென்று வெடித்து சிதறியது.. இதையடுத்து தீயும் அந்த இடத்தில் மளமளவென பற்றி கொண்டு, மற்ற இடங்களுக்கும் பரவ ஆரம்பித்தது.. இந்த வெடிவிபத்தில் அந்த அரசு கட்டிடமே இடிந்து தரை மட்டமானது… சாப்பிட்டு கொண்டிருந்த அத்தனை பேரும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி கொண்டனர்..

சிகிச்சை

உடனே போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து வந்து கட்டிட இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கிய ஊழியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்… இரவெல்லாம் இந்த மீட்பு பணியிலேயே அவர்கள் ஈடுபட்டனர்.. எனினும் இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்துவிட்டனர்..

அவர்களின் சடலங்களைதான் மீட்க முடிந்தது.. மேலும் பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. இதில் ஒருவரது நிலைமை ஆபத்தான நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

Previous Story

திருமலை எரிபொருள் இந்தியாவுக்கு!

Next Story

நீருக்குள் நீண்ட பாலத்தை திறந்த சீனா!