300 கிலோ கைதிக்கு வசதிகள்..
ஒரு நாள் செலவு
560000.00 RS
நமது நாட்டில் ஒரு கைதிக்கு உணவுக்காக ஒரு நாளைக்கு சராசரியாக 1000 முதல் 1200 வரை பராமரிப்பு செலவு உள்ளது. பராமரிப்பு செலவு என்று பார்த்தால் மிஞ்சிபோனால் ஆயிரங்களில் கூட வராது. ஆனால் ஆஸ்திரியா நாட்டில், 300 கிலோ எடையுடன், சிறையில் ஒரு கைதியை பராமரிக்க ஒரு நாளைக்கு 1.6 லட்சம் செலவு ஆகிறது.
இந்த விவரம் செய்தி ஊடகங்களில் வெளியான நிலையில், ஆஸ்திரியா நாட்டு மக்கள் ஆவேசத்தில் உள்ளனர். ஆஸ்திரியாவில் ஒரு கைதியின் தினசரி பராமரிப்புச் செலவு சுமார் 167.60 யூரோக்கள் ($180) என 2022ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதாவது SL.RS மதிப்பில் 560000.00 ரூபாய் ஆக உள்ளது. ஆனால் இது மிகஅதிகபட்சம் ஆகும். அந்நாட்டு நீதித்துறைவெளியிட்ட தகவலின்படி, ஒரு சிறையில் இருக்கும் கைதிக்கு நாள் ஒன்றுக்கு பராமரிப்புச் செலவு என்பது ரூ.6000 என்று கூறப்படுகிறது.
இந்தச் செலவு உணவு, தங்குமிடம், சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் பிற பராமரிப்புச் செலவுகளையும் உள்ளடக்கியதாகும். எனினும் இந்தத் தொகை வாழ்க்கைச் செலவு, பொருளாதார நிலை மற்றும் சிறைச்சாலை அமைப்பின் தரத்தைப் பொறுத்து வேறுபடுவதும் உண்டு.
இந்நிலையில் ஆஸ்திரியாவில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் 29 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவருக்காக மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
தினமும் லட்சக்கணக்கில் செலவு ஏற்படுவதால், அந்த நாட்டு மக்கள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். 29 வயது நபரின் வீட்டில் சோதனை செய்தபோது தான் கைது செய்தனர். அவரது வீட்டிலிருந்து 45 கிலோ கஞ்சா, 2 கிலோ கோகைன், சுமார் 2 கிலோ ஆம்பெடமைன் மற்றும் 2,000க்கும் மேற்பட்ட எக்ஸ்டசி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்துதான் கைதானார். அந்த இளைஞர் முதலில் வியன்னா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு இவரை பராமரிக்க முடியவில்லை என்று கூறி கோர்நெபர்க் சிறைக்கு மாற்றி உள்ளார்கள்.
ஏனெனில் அவரது எடை 300 கிலோவாகும். அவரை சிறையில் வைப்பதற்காகவ சில பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரும்புக் கம்பிகளை வெல்டிங் செய்து பெரிய கட்டில் அமைக்கப்பட்டிருக்கிறது. இவருக்காக பிரத்யேமாக கழிப்பறைகளும் கட்டப்பட்டுள்ளன.
அவரது உடல்நிலையை தினசரி கவனிக்க செவிலியரும் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள். ஒரு சிறையில் இருக்கும் கைதிக்கு நாள் ஒன்றுக்கு பராமரிப்புச் செலவு என்பது ரூ.21000 முதல் 48000 என்கிற அளவில் இருக்கும் நிலையில், போதைப்பொருள் கடத்தல் குற்றவாளியான 300 கிலோ எடையுள்ள ஆசாமியை பராமரிக்க ஒரு நாளைக்கு ரூ.5.6 லட்சம் ஆகிறது.
இந்த செய்தி, உள்நாட்டு ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு சாதாரண குடிமகன், மருத்துவரைப் பார்க்க ஒருமாதத்துக்கும் மேல் முன்பதிவு செய்து காத்திருக்கிறார்கள். அந்த நிலையில் தான் நாடு இருக்கிறது.
ஆனால், ஒரு கைதிக்கு நாட்டின் வளம் மற்றும் குடிமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது என்று மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்கள். சிறைக் கைதிகளுக்கான செலவுகள் மற்றும் சிறைப் பராமரிப்புக்காக மக்களின் வரிப்பணம் செலவிடப்படுவது குறித்து ஆஸ்திராவில் விவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரியாவில் மட்டுமல்ல உலகிலேயே இவர் தான் காஸ்ட்லியான மற்றும் அதிக எடையுள்ள ஜெயில் கைதி என்று சொல்கிறார்கள்.