-நஜீப்-
நன்றி: 17.08.2025 ஞாயிறு தினக்குரல்
ஆதாரமில்லாத செய்திகளை சந்தைப்படுத்தி மூக்குடைவது பற்றி சிலருக்கு சூடு சொரனையே கிடையாது. பிரதமர் ஹரிணி-அமைச்சர் வசந்த சமரசிங்ஹ முரண்படான கருத்துக்களால் அரசு சேறுபூசிக் கொண்டது என்பதனை மறைத்துப் பேச முடியாது.
அதனை வைத்து ஹரினி பிரதமர் பதவி பறிக்கப்படுகின்றது. பிமல் பிரதமராகின்றார். 57 நாடாளுமன்ற உறுப்பிர்கள் எதிரணிக்கு தாவல் என்று சஜித் அணி நாடாளுமன்ற உறுப்பிர் கூற ஆதரமில்லாத அந்த செய்தியை தரங்கொட்ட ஊடகங்கள் தூக்கிப்பிடித்து மக்களை ஏமாற்றி வருகின்றன.
இது எந்தளவு மடமையான செய்திகள். இது பற்றி அந்தக் கட்சியின் இணைச் செயலாளர் முஜிபுரிடம் கோட்டால் அப்படி என்பிபி. அரசில் யாரும் கட்சி தாவுவார்கள் என்று நாம் நம்பவில்லை என்று அவர் அடித்துக் கூறுகின்றார்.
நமக்கு வரும் தகவல்படி ஹரினி-வசந்த முரண்பாடான கருத்துகள் தொடர்பாக ஜனாதிபதி அனுர, டில்வின், பிரதமர் சந்தித்து கதை முற்றாக சீர்செய்யப்பட்டு விட்டது.





