-நஜீப்-
நன்றி 10.08.2025 ஞாயிறு தினக்குரல்
அரசு இன்று விழும் நாளை விழும் என்று பூச்சாண்டிக் கதை சொல்லி மக்களை ஏமாற்றுவோர் நாம் விரைவாக மீண்டும் பதவிக்கு வந்துவிடுவோம் என்று அதிகாரிகனை அச்சமூட்டி தமது குற்றங்களில் இருந்து தப்பிக் கொள்ள முனைகின்றது.
சதிகள் மூலம் வலுவான இந்த அரசை வீழ்த்த சிலர் கனவு காண்கின்றார்கள். இது ஒரு போதும் நடக்காது. அரசும் மக்களும் அதிகாரிகளைப் பாதுகாப்பார்கள் என்றார் ஜனாதிபதி அனுர. மீட்சிக்கு வேறு பாதைகள் கிடையாது.
நியாயமான உரிமைகளுக்குப் போராடுங்கள் அதனை நானும் ஆதரிக்கின்றேன் என்ற ஜனாதிபதி சதி என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்பதை அடித்துக் கூறினார். எமது அமைச்சர்களோ உறுப்பினர்களோ ஊழல் பண்ணினால் தயங்காது முறைபாடுகளை உரிய இடங்களுக்குக் கொடுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
நமக்கு நெருக்கமான எதிரணி உறுப்பினர் ஒருவர் ஏகேடி அசத்துகின்றார். மௌனமாக இருந்து காரியம் சாதிப்பதுதான் ஆரோக்கியம். இந்த அரசை அசைக்க முடியது என்றார் அவர்.





