எரிவாயு புரட்சி:கஜகஸ்தான் அரசு கவிழ்ந்தது!

எரிவாயு விலை உயர்வை கண்டித்து கஜகஸ்தானில் மக்கள் புரட்சி வெடித்தது. கட்டுக்கடங்காத இந்த போராட்டத்தின் விளைவாக அந்நாட்டு அரசு கவிழ்ந்தது. இதையடுத்து அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

எண்ணெய் வளங்களை கொண்ட மத்திய ஆசிய நாடுகளுள் ஒன்று கஜகஸ்தான். இங்கு புத்தாண்டையொட்டி திரவ பெட்ரோலிய எரிவாயுக்கான விலை அதிகரித்தது. இதற்கு அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எண்ணெய் மற்று்ம எரிவாயு ஏற்றுமதியாளரான கஜகஸ்தானில் விலை உயர்வு நியாயமே இல்லை எனக் கூறி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதையடுத்து தலைநகர் அல்மாட்டி, மேற்கு மாகாணமான மங்கிஸ்டாவில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராடினர்.

இதையடுத்து அல்மாட்டி மாநகராட்சி அலுவலகத்தை போராட்டக்காரர்கள் தீவைத்தனர். இதையடுத்து போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தியும் கேட்கவில்லை. அரசு கட்டடங்கள், வாகனங்களை தீவைத்து கொளுத்தினர்.

பேருந்து போக்குவரத்தை தடை செய்தனர். இதையடுத்து போலீஸார் அந்த பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி கூட்டத்தை கலைக்க முற்பட்டனர்.

எரிவாயு உருளை எல்பிஜியின் விலை குறைவு என்பதால் மக்கள் இரு சக்கர வாகனங்களிலிருந்து கார்களுக்கு மாறினர். தற்போது கார்களுக்கு பயன்படுத்தப்படும் எல்பிஜியின் விலையும் அதிகரித்துவிட்டதால் மக்கள் புரட்சி வெடித்தது.

போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர். இதையடுத்து அந்நாட்டு அரசு ராஜினாமா செய்தது. இந்த ராஜினாமாவை அந்நாட்டு அதிபர் காசிம் ஜோமார்ட் டோக்காயேவ் ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து அந்த நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் எரிவாயு விலையை கட்டுப்படுத்துமாறு மாகாண ஆளுநர்களுக்கு அதிபர் உத்தரவிட்டார்.

 

 

Previous Story

 ஹெலி விபத்து 2 இஸ்ரேல் விமானிகள் பலி

Next Story

குளிரூட்டி வெடித்து மாத்தளை - உக்குவெல ஹிசாம்  மரணம்