-நஜீப்-
நன்றி ஞாயிறு தினக்குரல் 27.07.2025
கல்வித்துறையில் வர இருக்கின்ற மாற்றங்களை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கின்ற ஒரு நிலை தெரிகின்றது. இது பற்றி கடந்தவாரம் பேசினோம். அடுத்து அரச காணிகளை அரசியல்வாதிகள் ஒரு மாவட்டத்தின் பரப்பளவுக்கு கொள்ளையடித்திருக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டும் அதற்கான ஆதாரங்களும் அம்பலமாகியுள்ளது.
இதில் ரம்மியமான குளக் கரைகளை முன்னாள் ஆட்சியாளர்கள் தமது பெயரில் எழுதி அங்கு கட்டிங்களையும் அமைத்திருக்கின்றார்கள். இந்தக் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக அனுராதபுர-நுவரவௌவில் அமைச்சர் லால்காந்த தலைமையில் அரசு தனது முதல் பணியை அங்கு மேற்கொண்டது.
அப்போது அவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சகோதரர் டட்லியின் சட்டவிரோத உல்லாச ஹோட்டல் பற்றிப் பேசியதுடன் அவரை சிலாகித்தும் பேசிய இருந்தார். அது இன்று கடும் விமர்சனத்துக்கு இலக்காகி வருகின்றது.