-நஜீப்-
நன்றி ஞாயிறு தினக்குரல் 27.07.2025
இன்னும் நான்கு வருடங்களுக்கு தேர்தல்களே கிடையாது என்று தேர்தல் ஆணையாளர் சமன்சிரி ரத்நாயக்க ஒரு வைபத்தில் பேசினார் என்று எதிரணிக்கு விசுவாசமான ஒரு செய்தித்தாள் சொல்லி இருந்தது.
அந்தச் செய்தி தப்பானது என அவர் மறுப்பும் தெரிவித்திந்தார். நமக்கு வருகின்ற தகவல்களின் படி 2026 பிற்பகுதியில் தேர்தலுக்கு அதிக வாய்ப்பு. அதற்கு முன்னர் சட்டச் சிக்கல்கள் சரிசெய்யப்படும்.
இந்தத் தேர்தல் வரும் போது அரசின் செல்வாக்கு சரிந்து விட்டது எனவே அனைத்து மாகாணசபைகளையும் நாமேகைப்பற்றுவோம் என்று எதிராயினர் கதை சொல்ல வருவார்கள்.
பலமான ஒரு எதிரணியையாவது மாகாணசபைகளில் வைத்திருப்பதாக இருந்தால் குறிப்பாக பிரதான எதிர்க்கட்சி விரைவாக தன்னை மறுசீரமைத்துக் கொள்ள வேண்டும்.
நாட்டில் உள்ள அனைத்து கிராமசேவர் பிரிவுகளிலும் (14000) என்பிபி. கிளைகள் இன்று செயல்பட்டு வருகின்றன. சஜித் அணியில் எத்தனை கிளைகள்தான் செயல்படுகின்றன?