சட்டென மோடி கொடுத்த ரியாக்ஷன் பிரதமர் மோடி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பிரதமர் மோடி – இங்கிலாந்து பிரதமர் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
பின்னர் இரு நாட்டு தலைவர்களும் பேசும் போது அதை மொழிபெயெர்த்த மொழி பெயர்ப்பாளர் இடையில் ஒரு நொடி தடுமாறினார். உடனே மோடி, அவரிடம் ஒன்னும் பிரச்சினையில்லை என்று சிரித்தபடியே கூறினார்.
பிரதமர் மோடி நேற்று 2 நாள் அரசு முறை பயணமாக இங்கிலாந்துக்கு புறப்பட்டார். இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் மோடியை இந்தோ-பசிபிக்கான இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் கேத்தரின் வெஸ்ட், இங்கிலாந்துக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி மற்றும் இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் லிண்டி கேமரூன் ஆகியோர் வரவேற்றனர்.
இந்தியில் மொழி பெயர்த்து பேசினார் மேலும் மோடியை இந்திய வம்சாவளியினர் உற்சாகத்துடன் வரவேற்றனர். அவர்கள் தேசிய கொடியுடன் மோடியை வாழ்த்தி வரவேற்பு அளித்தனர். அப்போது பலர் மோடியுடன் கைகுலுக்கினர். அவர்களுடன் மோடி சிறிது நேரம் உரையாடினார்.
இதையடுத்து, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை பிரதமர் மோடி சந்தித்தார். லண்டனில் இருந்து 50 கிமீ வட மேற்கே அமைந்துள்ள இங்கிலாந்து பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான செக்கர்சில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
தொடர்ந்து இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக இரு நாடுகள் இடையே 3 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் தற்போது கையெழுத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தான போது இரு நாட்டு பிரதமர்களும் கூட்டாக உரையாற்றினர். அப்போது இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் பேச்சை மொழி பெயர்ப்பாளர் ஒருவர் இந்தியில் மொழிபெயர்த்து பேசினார்.
பதற்றத்தில் திணறிய மொழிபெயர்ப்பாளர் வர்த்தக ஒப்பந்தம் குறித்து கீர் ஸ்டார்மர் பேசும் போது இரு தரப்பிலும் பில்லியன் கணக்கிலான பவுண்டுகள் முதலீடுகள் வரும் எனக்குறிப்பிட்டார். இதையடுத்து மொழி பெயர்ப்பாளர் அதை இந்தியில் கூறும் போது பதற்றத்தில் திணறிவிட்டார்.
உடனே குறுக்கிட்ட மோடி, ஒன்னும் பிரச்சினை இல்லை, இடையில் நாம் ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தலாம்’ என்றார். இதைக்கேட்ட ஸ்டார்மர் சிரித்தார். மொழிபெயர்ப்பாளரும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பின்னர் தடுமாற்றம் இன்றி பேச தொடங்கினார்.
என்னென்ன பொருட்கள் விலை குறையும் இந்தியா- இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ள சூழலில், பல்வேறு பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.
அதாவது பிரிட்டனில் இருந்து இறக்குமதியாகும் குளிர்பானங்கள், அழகு சாதன பொருட்கள், சாக்லேட், பிஸ்கட், விளக்குகள், கார்கள் ஆகியவற்றிற்கான வரி 15 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக குறைய உள்ளது.
அதேபோல, எல்க்ட்ரிக் வாகனங்களுக்கான வரி 110 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறையும். பிரெக்சிட் நிகழ்வு நடைபெற்ற பிறகு பிரிட்டன் மேற்கொள்ளக் கூடிய முதல் மிகப்பெரிய ஒப்பந்தம் இதுவேயாகும்.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, பிரதமர் மோடி பேசும் போது கூறியதாவது:- ரத்தின கற்கள் மற்றும் நகைகள் இந்தியா- இங்கிலாந்து உறவுகளில் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள். பல வருட கடின உழைப்புக்கு பிறகு, இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே ஒரு விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்திய ஜவுளி, காலணிகள், ரத்தின கற்கள் மற்றும் நகைகள், கடல் உணவு மற்றும் பொறியியல் பொருட்கள் இங்கிலாந்தில் ஒரு சிறந்த சந்தை அணுகலை பெறும்.
இந்தியாவின் விவசாய விளைபொருள்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு தொழிலுக்கு இங்கிலாந்து சந்தையில் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படும் ” என்றார்.