“கல்வி பற்றி ஜனாதிபதி ஆற்றிய உரை
ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பாகக்
கேட்டுப்பார்க்க வேண்டிய யதார்த்தமான
கருத்துக்கள். இது வரை நமது எந்தத்
தலைவர்களாவது இப்படியாக மக்களை
விளிப்பூட்டி இருக்கின்றார்களா சிந்தித்துப்
பாருங்கள்.? அதற்காக அவர் அரசியல்
கொள்கைகளை நீங்கள் ஏற்க வேண்டும்
என்ற கட்டாயம் இல்லை. ஆனாலும்
நியாயங்களை ஏற்றுக் கொள்வது
ஒரு நல்ல மனிதனின் பான்பாகும்.”
பாடசாலை விபரங்களை
வெளியிட்டார் ஜனாதிபதி
பாராளுமன்றத்தில் இன்று (24) உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பாடசாலைகளின் தற்போதைய நிலவரம் தொடர்பில் அதிர்ச்சிகரமான புள்ளி விபரங்களை வெளியிட்டார்.
98 பாடசாலைகளில் ஒரு மாணவனும் இல்லை.
115 பாடசாலைகளில் 10 மாணவர்களுக்கு குறைவு
20 மாணவர்களுக்கு குறைவான பாடசாலை 406.
30 மாணவர்களுக்கு குறைவான பாடசாலை 752.
40 மாணவர்களுக்கு குறைவான பாடசாலை 1141
50மாணவர்களுக்கு குறைவான பாடசாலை 1506. என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நாட்டின் மொத்த பாடசாலைகளின் 15 சதவீதமான பாடசாலைகளில் 50 மாணவர்களுக்கு குறைவாக உள்ளனர்.
100 மாணவர்களுக்கும் குறைவான பாடசாலைகள் 3144 உள்ளன.
குச்சவெளியில் 2 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்களும்
பண்டாரவளையில் 3 மாணவர்களுக்கு 3 ஆசிரியர்களும்
திருகோணமலையில் 4 மாணவர்களுக்கு 4 ஆசிரியர்களும் உள்ளனர்.
சில பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளை முழுமையாக மூட வேண்டும். சில பாடசாலைகளை இணைக்க வேண்டும். இன்னும் சில பிரதேசங்களில் புதிதாக பாடசாலைகளை உருவாக்க வேண்டும் என்றார்.





