-நஜீப்-
(நன்றி ஞாயிறு தினக்குரல்- 20.07.2025)
நாட்டில் கல்வித்துறையில் மாற்றங்கள் தொடர்பில் அனைத்துத் தரப்பினர் மத்தியலும் ஒரு பொது இணக்கப்பாடு இருந்து வருகின்றது.
அதற்கான சீர்திருத்தங்கள் பற்றி தற்போதய பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரினி கருத்துக்களை முன்வைத்து வருகின்றார். இதனை சிலர் யானை பார்த்த குருடன் போல விமர்சனங்களை பண்ணி வருகின்றனர்.
இதனால் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் இரண்டு நாள் கருத்தரங்கொன்றை நடாத்தி அவர்களின் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளுமாறு பிரதமருக்கு அறிவுரை வழங்கி இருக்கின்றார்.
இந்த கல்வி சீர்திருத்தங்களை முன்வைக்கின்ற போது முஸ்லிம் சமூகத்திலிருந்து ஒரு முனங்கள் வழக்கம் போல வரலாம். அழகியல் பாடங்களில் இதனை எதிர்பார்க்கலாம்.
எனவே இது விவகாரத்தில் முஸ்லிம் சமூகம் தனது மாற்று ஆலேசனைகளை முன்கூட்டி சமர்ப்பிக்க வேண்டும். அல்லது பொதுத் திட்டத்தை ஏற்க வேண்டும்.





