இஸ்ரேல்-சிரியா இடையே நீண்டகாலமாக மோதல் உள்ளது. இந்நிலையில் தான் இன்று திடீரென்று இஸ்ரேல், சிரியா மீது தாக்குல் நடத்தி உள்ளது. சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள அந்த நாட்டின் ராணுவம் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகம் மற்றும் சிரியா அதிபர் மாளிகை அருகே இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால் இருநாடுகள் இடையே போர் பதற்றம் உருவாகி உள்ளது.
இஸ்ரேலும், சிரியாவும் அண்டை நாடுகள். இவை இரண்டும் எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றன. இதில் இஸ்ரேல் யூத நாடாகும். சிரியா இஸ்லாமிய நாடாகும். சிரியாவுக்கும், இஸ்ரேலுக்கும் நீண்டகாலமாக மோதல் உள்ளது. அவ்வப்போது இருநாடுகளும் மோதிக்கொள்வது உண்டு.

இந்நிலையில் தான் இன்று திடீரென்று இஸ்ரேல், சிரியா மீது தாக்குதல் நடத்தி உள்ளது. சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள அந்த நாட்டின் ராணுவம் மற்றும் பாதுகாப்புத்துறையின் தலைமையகம் மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. இது இருநாடுகள் இடையேயான பதற்றத்தை அதிகரித்துள்ளது. மேலும் போரை உருவாக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணம் துரூஸ் இன மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பது தான். அதாவது சிரியா அதிபராக இருந்தவர் பஷர் அல் அசாத். இவர் சிரியா அதிபராக கடந்த 2000ம் ஆண்டு முதல் இருந்து வந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது.உள்நாட்டு போரை தொடங்கி அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
பஷர் அல் அசாத்துக்கு எதிராக அபு முகமது அல் ஜூலானி தலைமையிலான ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் என்ற அமைப்பினர் தலைமையில் கிளர்ச்சியாளர்கள் போரை தொடங்கி வெற்றி பெற்றனர்.
இதையடுத்து பஷர் அல் அசாத் ரஷ்யா தப்பித்து சென்றார். தற்போது அங்கு தான் அவர் உள்ளார். சிரியாவில் ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் அமைப்பின் தலைவரான அபு முகமது அல் ஜூலானி அதிபரானார். தற்போது சிரியா அவரது தலைமையில் தான் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையி்ல தான் முன்னாள் அதிபர் பஷர் அல் அசாத்தின் ஆதரவாளர்கள் நாட்டில் கிளர்ச்சி செய்து வருகின்றனர். இந்த கிளர்ச்சியை சாதாகமாக பயன்படுத்தி இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் துரூஸ் இன மக்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஸ்வேய்தா மாகாணத்தில் தங்கள் வசம் எடுக்க சிரியா அதிபர் அபு முகமது அல் ஜூலானி முடிவு செய்துள்ளார்.
இதனால் துரூஸ் மக்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் ராணுவம் சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள அந்த நாட்டின் ராணுவ தலைமையகத்தின் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளது.
ஏற்கனவே சிரியா-இஸ்ரேல் இடையே ஹோலன் குன்றுகள் தொடர்பான பிரச்சனை உள்ளது. இந்த ஹோலன் குன்றுகள் என்பதை இருநாடுகளின் எல்லையில் அமைந்துள்ளன. இருநாடுகளும் அதற்கு உரிமை கொண்டாடி வருகின்றன. ஹோலன் குன்றுகளின் ஒரு பகுதி சிரியாவிடம் இருப்பது போல், இன்னொரு பகுதி இஸ்ரேலிடம் உள்ளது.
இப்படியான சூழலில் தற்போது நேரடியாக இஸ்ரேல், சிரியாவில் தாக்குதல் நடத்தி உள்ளது. அதுவும் தங்களின் ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் துரூஸ் இன மக்களுக்காக.. இந்த தாக்குதல் தொடரும் பட்சத்தில் இருநாடுகள் இடையே போர் வெடிக்கும் அச்சம் ஏற்படலாம்.