ஆப்: 6 வயது சிறுமியை மணந்த 45 வயது நபர்..

தாலிபன்கள் சொன்ன காரணம்?

6-year-old girl sold into marriage with 45-year-old in Afghanistan; Taliban intervenes: 'Wait until she's nine' | World News - Times of India

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றியதற்குப் பிறகு, அங்கு பெண்களுக்கான சுதந்திரம் முழுவதுமாகப் பறிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து உலக நாடுகள் கவலையை வெளிப்படுத்தியவாறே உள்ளன.. ஐ.நா. கண்டனத்தை பதிவு செய்து கொண்டே உள்ளது..

இப்படிப்பட்ட சூழலில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்து, உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.. என்ன நடந்தது ஆப்கனில்? ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன.. தாலிபன்களை பொறுப்புக்கு வந்ததிலிருந்தே, பெண்கள் யாருமே வேலைக்கு செல்லக்கூடாது,

வெளியே நடமாடக்கூடாது, ஆண்களின் துணையுடன் தான் வரவேண்டும் என உத்தரவிட்டனர். மாணவிகளுக்கு உயர்நிலை பள்ளிகளில் அனுமதி மறுப்பு, தொடக்க பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக வகுப்புகள் , பூங்காக்களிள் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக செல்ல வேண்டும்.

Famed 'Afghan Girl' Finally Gets a Home | National Geographic

ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் அதாவது தம்பதிகள் ஒரே குடும்பத்தினராக இருந்தாலும் பூங்காவுக்கு சேர்ந்து செல்லகூடாது, ஆண் டாக்டர்களிடம் பெண்கள் சிகிச்சைக்கு செல்லக்கூடாது, விமான பயணங்களிலும் தனித்தனியாக பயணம் செய்ய வேண்டும் என தாலிபான்களின் கண்டிஷன்கள் நீண்டபடியே உள்ளன.

உயிருள்ள எதையும் போட்டோ எடுக்கக்கூடாது, அவைகளை சோஷியல் மீடியாவில் பதிவிட கூடாது, இஸ்லாமியர் அல்லாதவர்களுடன் நட்பாக பழகக்கூடாது. அவர்களுக்கு எந்த உதவியும் செய்யக்கூடாது, மனைவியாக இருந்தாலும் கூட, உடலுறவின்போது இயற்கைக்கு மாறாக உறவு கொள்ளக்கூடாது, பெண்களுள்ள வீடுகளில் ஜன்னல் வைக்க கூடாது போன்ற சட்டங்களும் பகீரை கிளப்பிவிட்டு வருகின்றன, ஆண்களுக்கும் கட்டுப்பாடு நல்லொழுக்கத்தை கடைப்பிடிக்கவே இப்படியான சட்டங்கள் கொண்டு வரப்பட்டிருப்பதாக காரணங்கள் சொன்னாலும், உலக நாடுகள் கடுமையான கொந்தளிப்பை வெளிப்படுத்தியிருந்தன.. சமீபத்தில் ஆண்களுக்குகூட சில கட்டுப்பாடுகள் வெளியாகியிருந்தன..

அதாவது, தாலிபான் கலாச்சார காவலர்கள் ரமலான் மாதத்தில் மசூதிகளில் தொழுகைக்கு வராத ஆண்களை கைது செய்திருந்தனர்.. ஹேர் ஸ்டைல் விதிகளுக்கு உட்பட்டு இல்லாததால் அவர்களையும் முடிதிருத்தும் தொழிலாளர்களையும் கூட ஆப்கான் நாட்டின் கலாச்சார காவலர்கள் கைது செய்திருந்தது, பெரும் அதிர்வலையை உண்டுபண்ணியிருந்தது.

Naghma, a shy Afghan girl, was married off to a moneylender's son

45 நபரின் 2 மனைவிகள் இப்போது ஆப்கானிஸ்தானில் நடந்துள்ள சம்பவம், மீண்டும் உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.. மர்ஜியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அந்த தம்பதியினர்.. இவர்களுக்கு கடன் பிரச்சனை இருந்து வந்துள்ளது..

இந்த கடனை அடைக்க வழி தெரியாமல், தங்களது 6 வயது மகளை, 45 வயது நபருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.   அந்த 45 வயது நபருக்கு ஏற்கனவே 2 மனைவிகள் இருக்கிறார்கள்.. 3வதாக 6 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார் அந்த நபர்..

இந்த திருமணத்திற்காக அந்தக் குழந்தையின் அப்பாவுக்கு பணம் கொடுத்து உதவியுள்ளார். உடனே, சிறுமியை அவரிடம் பெற்ற அப்பாவே விற்றுள்ளார். இதற்கு பிறகுதான், சிறுமியை 45 வயது நபர் கட்டாயம் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

அப்பா கைது

இந்த விஷயம் தலிபான் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அதிகாரிகள், சிறுமிக்கு வெறும் 6 வயதுதான் ஆகிறது என்றனர்.

சிறுமிக்கு 9 வயதாகட்டும், அவரை காத்திருக்குமாறு மாப்பிள்ளையிடம் அறிவுறுத்திவிட்டு, சிறுமியை பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு வந்தனர்.. பிறகு, மணமகனையும், சிறுமியின் அப்பாவையும் கைது செய்தனர்..

இந்த செய்தியை அமெரிக்காவிலுள்ள மீடியா வெளியிட்ட பிறகுதான், வெளிச்சத்துக்கே தெரியவந்தது.. இதைக்கேள்விப்பட்டு உலக நாடுகள் மறுபடியும் ஆப்கன் அரசை கண்டித்து வருகின்றன.. ஆனால், ஆப்கானிஸ்தான் வழக்கம்போல், எந்த பதிலையும், விளக்கத்தை இதுவரை தரவில்லை.

Previous Story

USA க்கு IRAN விதித்த 3 நிபந்தனைகள்

Next Story

සජිත් හොරකම් එළියට...නාවලපිට්යෙ සුදු අයියා ලෙඩ වෙලාලු...