HAPPY NEW YEAR 2022

புத்தாண்டை வரவேற்கும்

முதல்-கடைசி  நாடுகள்

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் என்பது உலகம் முழுவதும் தழுவிய கொண்டாட்டமாகும்.. இதற்கு சாதி, மதம், இனம், மொழி எதுவும் இல்லை.. உலக மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடும் முக்கியமான நாளாகும்..

தமிழ் புத்தாண்டு என்பது மாநிலம் சார்ந்தது என்றாலும், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் அளவுக்கு கேளிக்கை, விழாக்களின் முக்கியத்துவத்தை பெறுவதில்லை..

இரவு

பொதுவாக, பூமிப்பந்தின் ஒரு முனையில் பகலாக இருக்கும்போது, இன்னொரு முனையில் இரவாக இருக்கும்… அதை வைத்துதான் புத்தாண்டு பிறந்துவிட்டதாக கணக்கிடப்படுகிறது.. அந்த வகையில், புத்தாண்டை முதலில் கொண்டாடும் நாடு, கடைசியாக வரவேற்கும் நாடு எவை என்பதை பார்ப்போம்..!

பசிபிக் தீவு

பசிபிக் தீவு நாடுகளான டோங்கா சமோவா, கிரிபாட்டி நாடுகளில் முதன்முதலாக புத்தாண்டு பிறக்கிறது. அதாவது இந்திய, இலங்கை நேரப்படி 31-ம்தேதி பிற்பகல் 3.30 மணி என்றால், இவர்களுக்கு சரியாக அதிகாலை 12 மணி ஆகிவிடும்.. புத்தாண்டையும் வரவேற்க தயாராகிவிடுவார்கள்.. உலகிலேயே முதல் முதலாக புத்தாண்டு இவர்களுக்கு பிறப்பதால், எப்போதுமே சற்று ஆடம்பரமாகவே கொண்டாடுவார்கள்.. லேசர் விளக்குள் ஒளிர, வாண வேடிக்கைகளுடன் கொண்டாட்டம் களை கட்டும்.. இந்திய நேரப்படி 31-ம்தேதி பிற்பகல் 3.30 மணிக்கு நியூசிலாந்து புத்தாண்டு கொண்டாட்டம் ஆரம்பமாகும்.

இந்தியா-இலங்கை

அடுத்ததாக இங்கிலாந்து நாட்டில் புத்தாண்டு கொண்டாடப்படும்.. இந்திய நேரப்படி நமக்கு மாலை 5.30 என்றால், இங்கிலாந்திலோ புத்தாண்டுக்கு நேரம் நெருங்கிவிடும்.. அதேபோல, ஜனவரி 1ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் துவங்கும்.. இதில், மாலை 5.30 மணிக்கு புத்தாண்டு பிறக்கும் கடைசி நாடாக இருப்பது பேக்கர் தீவு ஆகும்.. இதைதவிர வேறு எந்தெந்த நாடுகளில் எப்போது புத்தாண்டு பிறக்கும் என்பதை பார்ப்போம்:

  • 5:30 pm: ரஷ்யாவின் ஒரு பகுதி
  • 6:30 pm: ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், சிட்னி, கான்பெரா, ஹோனியாரா
  • 7 pm: அடிலைய்டு, புரோக்கன் ஹில், செடுனா
  • 7:30 pm: பிரிஸ்பேன், போர்ட் மோர்ஸ்பை, ஹகத்னா
  • 8 pm: டார்வின், அலைஸ் ஸ்பிரிங்ஸ், டெனண்ட் கிரீக்
  • 8:30 pm: ஜப்பான், தென் கொரியாவின் டோக்யோ, சியோல், பியாங்யாங்க், டிலி, நெருல்மட்
  • 9:30 pm: சீனா, பிலிப்பைன்ஸ்
  • 10:30 pm: இந்தோனேசியா, தாய்லாந்து
  • 11 pm: மியான்மர்
  • 11:30 pm: வங்கதேசம்
  • 11:45 pm: நேபாளத்தின் காட்மண்ட், பொக்காரா, பிரட் நகர், டாரன்
  • 12:00 am: இந்தியா, இலங்கை
  • 12:30 am: பாகிஸ்தான்
  • 1 am: ஆப்கானிஸ்தான். 

கடைசி நாடு

இந்திய நேரப்படி சிகாகோவில் காலை 11.30 மணி, யரிஜோனாவில் 12.30 மணி, அலாஸ்கா மதியம் 2.30 மணி, ஹவாலியில் பிறப்கல் 3.30 மணி அளவில் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்திய நேரப்படி ஜனவரி 1, காலை 9.30 மணி முதல் 1.30 மணி வரை மார்கொயஸாஸ், அமெரிக்கன் சமோவா ஆகிய நாடுகள் புத்தாண்டை கொண்டாடுகின்றன… அதேபோல, ஜனவரி 1, மாலை 5.50 மணிக்கு பேக்கர் தீவு புத்தாண்டை கொண்டாடுகிறது.

இங்குதான் புத்தாண்டு பிறக்கும் கடைசி நாடாகும்.. ஆக, ஒருநாள் முன்னதாக மாலை நேரத்தில் துவங்கும் புத்தாண்டானது, மறுநாள் மாலை வரை ஒவ்வொரு உலக நாடுகளும் கொண்டாடி முடிக்கின்றன.

Previous Story

ஓவைசியை அரஸ்ட் பண்ண ரூ 22 லட்சம் தரேன்.

Next Story

கச்சா எண்ணெய் சேமிப்பு தொட்டிகள்; இந்தியாவுக்கு அளிக்கிறது இலங்கை