-நஜீப் பின் கபூர்-
*****
இரகசியம்: கணவனை நம்பாதீர்கள்!
அப்ப மனைவியை…? நம்பாதீர்கள் !!
இதுதான் இன்றைய உலகம்-சமூகம்!
*****
இஸ்ரேல்-மெசாட் என்றால் முஸ்லிம்கள் கடும் கோபத்தில் இருப்பார்கள். வெட்ட வேண்டும் கொத்த வேண்டும் என்று கூட சொல்வதுண்டு. ஆனால் இந்த இஸ்ரேல்-மொசட் எந்தளவு திறமைசாலிகள் என்பதனை எவரும் மறுக்க முடியாது.
அதற்கு சிறந்த ஒரு உதாரணம்தான் இந்தக் கதை. இந்த கதையை முஸ்லிம்கள் மட்டுமல்ல முஸ்லிம் அல்லாத அனைத்து தேசபக்தர்களும் சராசரி மனிதர்களும் ஒரு படிப்பிணைக்காக அமைதியாக கேட்டுப்பார்ப்பது ஆரோக்கியமாக இருக்கும் ஒவ்வொரு நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் சமூகத்துக்கும் இது மிக முக்கியமானது.
நமது நாட்டில் நடைபெற்ற ஈஸ்டர் தாக்குதல் கூட இப்படித்தான் நடந்திருக்கின்றது. இதனை முஸ்லிம்கள் தான் நடாத்தி அதனை ஒரு புனிதப்பணி என்றுதான் ‘அவர்கள்’ எண்ணிக் கொண்டு பணிபுரிந்திருக்கின்றார்கள்.
அரசியல்வாதிகளின் கைக்கூலிகளாக இருந்துதான் இந்த தியாகிகள் (?) அப்பாவிகளை கொன்று குவித்திருந்தனர்.
(உள் நாட்டில் இன்று கூட அவர்கள் தமது சேட்டைகளை கைவிட்டு விட்டார்கள் என்று எவரும் எண்ணிக் கொள்ளக் கூடாது.)
உலகில் செயல்பாடுகள் இன்று எப்படி நகர்கின்றன என்பதற்கு இது நல்லதொரு உதாரணம். எங்கு எண்ண நடக்கின்றது? பக்கத்தில் நிற்பவர்கள் யார்? நமது உறவுகள் நண்பர்கள் யார்? என்பதனை ஒவ்வொரு தனி மனிதனும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.