இலங்கைக்கு பொருளாதார தடை: சீன நிறுவனம்

சீனாவைச் சேர்ந்த குயிங்டா சீவின் பயோடெக் நிறுவனம் 20 ஆயிரம் டன் இயற்கை உரத்தை இலங்கைக்கு அனுப்பியது.

‘இந்த உரம், பயிர் மற்றும் நிலத்தை சேதப்படுத்தும் என்பதுடன் அதில் உள்ள பாக்டீரியாக்கள், கேரட், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விளைச்சலை பாதிக்கும்’ என, இலங்கை வேளாண் விஞ்ஞானிகள் எச்சரித்தனர். இதையடுத்து உரம் இறக்குமதிக்கு இலங்கை அரசு தடை விதித்தது.

இருப்பினும் உரத்திற்கான தொகையை தர சம்மதித்தது.ஆனால் இலங்கை அரசின் நடவடிக்கையால் உலகளவில் நிறுவனத்தின் மதிப்பு பாதிக்கப்பட்டதாக குயிங்டா சீவின் கூறியதுடன், சிங்கப்பூர் மத்தியஸ்த தீர்ப்பாயத்தில் வழக்கும் தொடுத்துள்ளது.

 

Previous Story

பாக்: சீனாவிடம் இருந்து 25 போர் விமானங்கள்

Next Story

அமைச்சரவைதோல்வி - விதுர