சஜித் செத்துப் போயிட்டார்-ஹக்கீம்! SLMC தேசியப் பட்டியலுக்கு ஆப்பா டீலா!
“செத்துப் போன கேஸ்” சமூகத்துக்கு புது விளக்கம் தரும் மு.கா ஹக்கீம்!
மலையகத்தில் மிகவும் செல்வாக்கான ஒரு நகர் அகுரணை. இதனை மலையக முஸ்லிம்களின் தலை நகர் என்று நாம் அடையாளப்படுத்தி வருகின்றோம். அரசியல் ரீதியில் இந்த நகரம் ஐதேக கோட்டைகளில் ஒன்று.
இன்று அங்கு சஜித் தலைமையிலான ஐமச செல்வாக்கு மேலோங்கிக் காணப்படுகின்றது. ACS. ஹமீடுக்குப் பின்னர் ஹலீம் வாரிசு அடிப்படையில் அங்கு அதிகாரத்தில் அமர்ந்து கொண்டார்.
இந்த ஹலீம் ரணில் விசுவாசியாக செயல்பட்டவர். பின்னர் சஜித் பக்கம் தாவினார். அரசியல் மற்றும் செயல்பாட்டு ரீதியில் இவர் மிகவும் பலயீனமான ஒரு மனிதன்.

என்றாலும் வலதுசாரி சிந்தனை கொண்ட முஸ்லிம் வாக்குகளினால் அவர் தொடர்ந்தும் கண்டி MP யாக வர முடிந்தது. இதற்கு விகிதாசார தேர்தல் முறை அவருக்குக் கைகொடுத்தது.
இறுதியாக நடைபெற்ற தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவிக் கொண்டார். தமது கட்சிக்காரர்களே இந்தத் தேர்தலில் அவரை விரட்டி விட்டார்கள்.
ஆனாலும் மாவட்டத்தில் ஒரு 5000 அல்லது 6000 ஆதரவாலர்களைக் கொண்ட மு.கா.தலைவர் ஹக்கீம் இந்தத் தேர்தலில் SJB முஸ்லிம் வாக்குகளைப் பெற்று கரைசேர முடிந்தது. அதற்கு அவருக்குப் பண பலம் கை கொடுத்து உதவி இருக்கின்றது.
சராசரியாக ஒரு இலட்சம் வரை வாக்குகளைப் பெறும் ஹக்கீம் இந்த முறை 30883 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.
நமது நாடாளுமன்றளுத்தில் தமிழ் அகராதிக்கு புதிய வார்த்தைகளை அறிமுகம் செய்து வருகின்ற உறுப்பினரை (57716) விடவும் இந்தப் பாண்டித்திய தனித்துவத் தலைவர் 26833 வாக்குகளைக் குறைவாக பெற்று மூக்குடைபட அவர் மீது கண்டி முஸ்லிம்களுக்கு இருக்கும் வெறுப்புத்தான் காரணம்.
இப்போது தட்டுத் தடுமாறி கரை சேர்ந்த ஹக்கீம் சஜீத்தை செத்துப் போன கேஸ்- உதவாகறை செல்லாக்காசு என்றெல்லாம் மேடைகளில் பகிரங்கமாக திட்டிவருகின்றார்.
கட்சித் தலைவரிடத்துப் மன்னிப்புக்கோட்டு இப்போது மனிதன் புது விளக்கம் சொல்லித் திரிகின்றார். அப்படியானால் SJB உடன் இதன் பின்னர் தமக்கும் தமது கட்சிக்கும் எந்த உறவும் கிடையாது என்றும் சொல்லி இருந்தாரே அது என்ன?.
பொதுத் தேர்தலில் பின்னர் இப்படி எல்லாம் நடக்கும் என்று நாம் பல முறை சொல்லி இருந்தோம். தன்னையும் கட்சியையும் அவமானப் படுத்தும் ஒருவருக்கு சஜித் தேசியப் பட்டியல் கொடுப்பார?
அல்லது ஏதாவது கொடுக்கல் வாங்களைப் பண்ணிவிட்டு தலைவரே நாடகம் ஆடுகின்றாரோ? இதுதான் ஹக்கீம் அரசியல்.
அவை அப்படி இருக்க இப்போது மீண்டும் அகுரண அரசியலுக்கு வருவோம். தற்போது நாட்டில் 339 உள்ளாட்சி சபைகளுக்குத் தேர்தல். இதில் 300 வரையிலான இடங்களை ஆளும் அனுர தரப்பு கைப்பற்றும் என்பது எமது கணிப்பு.
இந்த நிலையில் அகுரண பிரதேச சபைக்கு மிகவும் நெருக்கமான ஒரு போட்டி இருப்பதாக நமக்குத் தெரிகின்றது.
ஒட்டு மொத்த நாடும் ஒரு தீர்மானத்துக்கு வருகின்றது இந்த நேரம் அகுரண மட்டும் வித்தியாசமான ஒரு முடிவை எடுக்குமாக இருந்தால் அது வரலாற்றில் மிகப் பெரும் காட்டிக் கொடுப்பாகவும் அரசியல் ரீதியில் ஒரு தற்கொலை முயற்சியாகவும் இது அமையும். இதனை அகுரண சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தத் தேர்தலில் அங்கு சமூக ஊடகங்கள் மற்றும் பிரசார வியூகங்களை NPP உரிய முறையில் பாவித்துக் கொள்ளவில்லை என்பது எமது குற்றச்சாட்டாக இருக்கின்றது.
கட்சி சிங்கள சமூகத்தில் மேற்கொள்கின்ற பாணியில் முஸ்லிம் பிரதேசங்களில் தேர்தல் பரப்புரை செய்வது எந்தளவு எடுபடும் என்பது நமக்குப் புரியவில்லை.
இதனை நாம் அந்தக் கட்சித் தலைவர்கள் மட்டத்திலும் சுட்டிக் காட்டியும் இருக்கின்றோம். இதனைக் கணிசமான முஸ்லிம் வேட்பாளர்கள் உணரவில்லை.
அதன் பெறுபேருகள் தேர்தல் முடிவில் தெரியவரும். எப்படியும் தேர்தலில் முஸ்லிம் வட்டாங்களில் NPP க்குப் பின்னடைவு என்றால் அது அகுரண சமூகம் விட்ட மாபெரும் வரலாற்றுத் தவறாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது.
பிந்திய குறிப்பு: ஹக்கீம் உறவுகளே அந்தக் கதைக்கு தமது எதிர்ப்பை முகத்திற்குச் சொல்லி இருப்பது பற்றிய தகவலும், அடுத்து அந்த உரையின் பின்னர் மு.கா. வேட்பாளர்களே தலைவர் தமது கூட்டங்களில் வந்து பேசுவதை நிராகரித்த சம்பவங்களும் நமக்குத் தெரிய வருகின்றது.
தலைக்கனம் உச்சத்தில் வந்தால் இப்படித்தான் நடக்கும். இதே போன்ற ஒரு நிலைதான் தமிழர்கள் மத்தியிலும் சுமந்திரனுக்கும் ஏற்பட்டிருக்கின்றது.





