டிரம்பின் புது யோசனையால்
அமெரிக்காவுக்கு மேலும் சிக்கல்

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் கனிமங்களுக்கு கூடுதல் வரியை விதிக்க டிரம்ப் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அந்நாட்டுக்குதான் அதிக பாதிப்பு ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்காவுக்கு தேவையான 50 முக்கியமான கனிமங்களில் 30ஐ சீனாதான் சப்ளை செய்கிறது. இப்படி இருக்கையில் வெளிநாட்டின் கனிமங்களுக்கு வரியை போடும் டிரம்ப்பின் முடிவு அமெரிக்காவுக்கு எதிரானதாக பார்க்கப்படுகிறது. சீனா மீதான பதிலடி சீனா மீதான பதிலடியை அதிகரிக்கும் வகையில் அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை பரிசீலித்து வருகிறது.
கனிமங்களுக்கு கூடுதல் வரி என்பதும் இப்படியான பரிசீலனை முயற்சிதான். மேலே குறிப்பிட்டதை போல, அமெரிக்கா தனது கனிம தேவைகளுக்கு சீனாவைதான் நம்பியிருக்கிறது. வரி விவகாரத்தில் சீனா பதிலடியாக, தான் ஏற்றுமதி செய்யும் கனிமங்களுக்கு அதிக கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியிருக்கிறது. எனவேதான் அமெரிக்காவும் டென்ஷனாகியிருக்கிறது.
புதிய வரி டென்ஷனான டிரம்ப், அமெரிக்காவின் வர்த்தக விரிவாக்க சட்டம் 1962 பிரிவு 232ன் கீழ், தேசிய பாதுகாப்பு அடிப்படையில் கனிமங்கள் மீதான வரி பற்றி ஆய்வு செய்ய உத்தரவிட்டிருக்கிறார். இதற்கு முன்னர் இரும்பு, அலுமினியம் மீதான வரிகளுக்கும் இதுபோன்ற ஆய்வை டிரம்ப் பயன்படுத்தியிருக்கிறார்.
அந்த வகையில் இந்த ஆய்வை வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் மேற்கொள்ள இருக்கிறது. 180 நாட்களில் வரி தொடர்பான ஆய்வின் முடிவுகள் வெளியாகும். இதன் அடிப்படையில் புதிய வரிகளை நிர்ணயிக்கப்படும்.
கனிம உற்பத்தி சரி வரி விதிக்கப்பட்டால் அமெரிக்காவின் கனிம தேவைகள் எப்படி பூர்த்தியாகும்? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. தற்போதைய சூழலில் லிதியம் உற்பத்தி செய்யும் சுரங்கம் குறைந்த அளவில்தான் செயல்படுகிறது. அதேபோல நிக்கல் – ஒரு சுரங்கம் மட்டுமே இருக்கிறது.
அதுவும் செயல்பட்டில் இல்லை. கோபால்ட் – சுரங்கம் கிடையாது காப்பர்-சில சுரங்கங்கள் இருக்கின்றன. ஆனால் 2 மட்டுமே செயல்பாட்டில் இருக்கின்றன. 17 வகை அரிய கனிமங்கள்- பெரும்பாலும் சீனாவில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து சீனா கூறுகையில், “சப்ளை செயினில் செயற்கை தலையீடு செய்வது சந்தை பொருளாதாரம் மற்றும் சர்வதேச வர்த்தக விதிகளுக்கும் சர்வதேச வர்த்தக விதிகளுக்கும் எதிரானது” என்று சீனாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
அமெரிக்காவுக்கு ஆதரவு சீனாவை பகைத்துக்கொண்டால், அமெரிக்காவுக்கு கனிமங்கள் கிடைப்பது கொஞ்சம் டிமாண்டாக இருக்கும். சீனாவுக்கு பதில் ஆஸ்திரேலியாவை அமெரிக்கா நம்ப தொடங்கும். ஆஸ்திரேலியாவில் சில கனிமங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இது குறித்த அந்நாட்டின் கனிம கவுன்சில் தலைவர் டானியா கூறுகையில், “இது ஆஸ்திரேலியாவு்க்கு கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு. நம்மால் அமெரிக்காவுடன் இணைந்து சிறப்பாக பணியாற்ற முடியும்” என்று கூறியுள்ளார். யதார்த்தம் என்ன? ஆஸ்திரேலியாவின் ஸ்டாடர்ஜிக் மெட்டீரியல் நிறுவனம், “அமெரிக்கா நமக்கு ஆதரவளித்திருக்கிறது.
கொரியாவில் செயல்படும் கனிம ஆலையை போல அமெரிக்காவில் ஒன்றை அமைக்க டிரம்ப் விரும்புகிறார்” என்று தெரிவித்திருக்கிறது. என்னதான் டிரம்ப்புக்கு ஆதரவாக பல நிறுவனங்கள் குரல் கொடுத்தாலும், நிலைமை யதார்த்தமாக இல்லை. அமெரிக்காவில் கனிம தொழிற்சாலைகள் அமைய சில காலம் பிடிக்கும்.
எனினும் அமெரிக்க கனிம வழங்குனரை ஊக்குவிக்கவும், நீண்ட கால திட்டத்தை மனதில் வைத்தும் டிரம்ப் இந்த முடிவை மேற்கொண்டிருக்கிறார் என சொல்லப்படுகிறது.





