அஸ்திவாரத்தையே அசைத்து விட்டதே!
சீனாவின் மத்திய வங்கி தங்கள் நாட்டின் பணமான யுவான் வீழ்ச்சியை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்து உள்ளது. இதனால் அமெரிக்க டாலர் கொள்முதலைக் குறைக்குமாறு அரசுக்குச் சொந்தமான வங்கிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இதனால் டாலர் மதிப்பு வேகமாக சரியும். டாலரை நம்பி உள்ள மற்ற வர்த்தகங்கள் மிக வேகமாக சரியும். சீனா – அமெரிக்கா இடையே வர்த்தக போர் உச்சம் அடைந்து உள்ளது. சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து வரிகளை உயர்த்தி வருகிறார் .
உலகம் முழுக்க உள்ள நாடுகள் மீது டிரம்ப் உயர்த்திய வரிகளை 90 நாட்களுக்கு நிறுத்தி உள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்த்தக போரை தொடங்கி உள்ளார். உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் மீது வர்த்தக போரை அறிவித்து உள்ளார். 10% அடிப்படை வரி உலகம் முழுக்க உள்ள எல்லா நாடுகள் மீதும் விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த புதிய பதிலடி வரி விதிப்பின் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீத விகிதத்தையும் சீனா 34 சதவீத வரியையும் எதிர்கொள்கிறது. இந்தியா 26 சதவீதம், தென் கொரியா 25 சதவீதம் மற்றும் ஜப்பான் 24 சதவீதம்., வரி விதிக்கப்படும்.
அதிகபட்சமாக கம்போடியா மீது 49%, வியட்நாம் மீது 46%, இலங்கை மீது 44% வரி விதிக்கப்பட்டு உள்ளது. சீனா மீது 34%, ஐரோப்பிய ஒன்றியம் மீது 20%, ஜப்பான் மீது 24% வரிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இப்போது உலகம் முழுக்க உள்ள நாடுகள் மீது டிரம்ப் உயர்த்திய வரிகளை 90 நாட்களுக்கு நிறுத்தி உள்ளார்.
அதே சமயம் சீனா மீதான வரிகளை அவர் நிறுத்தவில்லை. சீனா மீது வரிகள் தொடரும் என்று அறிவித்துள்ளார். சீனா – அமெரிக்கா வரி மோதல் ஏப்ரல் 8, 2025 நிலவரப்படி, சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக போர் தீவிரமடைந்துள்ளது. இது உலகளாவிய அளவில் வர்த்தகத்தை மிக மோசமாக்கி உள்ளது.
அமெரிக்கா விதித்த வரிக்கு பதிலடியாக சீனா, அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரியை விதித்தது. இதனால் கடும் கோபம் அடைந்த டொனால்டு டிரம்ப், சீனாவிற்கு ஒருநாள் கெடு விதித்து இருந்தார். அதற்குள் சீனா தனது கூடுதல் வரிவிதிப்பை திரும்ப பெற வேண்டும் என்றும் இல்லையென்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்து இருந்தார்.
இதையடுத்து கால அவகாசம் முடிந்துள்ள நிலையில், சீனப் பொருட்களின் மீதான வரியை 104% ஆக உயர்த்தி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். டிரம்ப் அதிரடி ” இதற்கு பதிலடியாக சீனா, அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு 84 சதவீதம் கூடுதல் வரியை விதித்தது.
இதையடுத்து சீனாவின் பொருட்களுக்கு 400% வரி விதிக்க போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். டாலருக்கு ஆப்பு இந்த மோதலின் ஒரு கட்டமாக சீனாவின் மத்திய வங்கி தங்கள் நாட்டின் பணமான யுவான் வீழ்ச்சியை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்து உள்ளது.
இதனால் அமெரிக்க டாலர் கொள்முதலைக் குறைக்குமாறு அரசுக்குச் சொந்தமான வங்கிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் டாலர் மதிப்பு வேகமாக சரியும். டாலரை நம்பி உள்ள மற்ற வர்த்தகங்கள் மிக வேகமாக சரியும்.
சீனாவின் யுவான் இந்த மாதம் இதுவரை சுமார் 1.3% இழந்துள்ளது. நேற்று மட்டும் ஒரு டாலருக்கு 7.35 யுவான் சரிந்தது. இதை தடுக்கவே டாலர் கொள்முதல் தடுக்கப்பட்டு உள்ளது.
“சீனாவும், அமெரிக்காவும், ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் முக்கிய பொருட்கள் என்ன தெரியுமா? முழு விவரம்” அடுத்தடுத்து கேம் ஆடும் சீனா ஏற்கனவே சீனாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் அரியவகை கனிமங்கள் மற்றும் தனிமங்களை நிறுத்த போவதாக அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது.
சீனாவின் மீது அமெரிக்கா விதித்துள்ள பரஸ்பர வரிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனா அதிபர் ஜி ஜின்பிங் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு 50 கனிமங்களை முக்கியமானதாக வகைப்படுத்துகிறது.
அதாவது அரியவகை கனிமங்கள் என்று வகைப்படுத்துகிறது. கோபால்ட், லித்தியம், மாங்கனீசு மற்றும் நிக்கல் ஆகியவை ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் மற்றும் மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படுகின்றன, அதே நேரத்தில் செம்பு சோலார் பேனல்கள் மற்றும் மின் இணைப்புகளிலும் இவை அதிகம் பயன்படுத்தப்படுகிறது,
PV பேனல்களில் சிலிக்கான் மற்றும் லித்தியம்-அயன் பேட்டரிகளில் கிராஃபைட் பயன்படுத்தப்படுகிறது. ஆர்சனிக், காலியம் மற்றும் டெல்லூரியம் ஆகியவை சூரிய மின்கலங்களில் பயன்படுத்தப்படுகின்றன. உலகளாவிய அளவில் இந்த முக்கியமான கனிமங்களின் உற்பத்தியில் 60% சீனா கட்டுப்படுகிறது.
அதேபோல் உலகளாவிய அளவில் இந்த கனிமங்களை பயன்படுத்தும் செயலாக்கத் திறனில் 85%ஐ சீனா கட்டுப்படுத்துகிறது. மீதமுள்ள திறன் காங்கோ ஜனநாயகக் குடியரசு (DR காங்கோ) மற்றும் இந்தோனேசியா போன்ற அதிக சீன முதலீட்டைக் கொண்ட நாடுகளில் அமைந்துள்ளது.
இந்த சீனாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் அரியவகை கனிமங்கள் மற்றும் தனிமங்களை நிறுத்த போவதாக அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது. இந்த நிலையில்தான் சீனாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் அரியவகை கனிமங்கள் மற்றும் தனிமங்களை நிறுத்த போவதாக அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது.
சீனாவை விட அமெரிக்காதான் சீனாவை அதிகம் நம்பி இருக்கிறது. சீனா அமெரிக்காவை நம்பி இல்லை. அமெரிக்கா சீனாவின் பொருட்கள் இன்றி இயங்க முடியாது. சீனாவின் உற்பத்தி அந்த அளவிற்கு அதிகம் உள்ளது.
இதனால் சீனாவின் பொருட்கள் இன்றி அமெரிக்கா கடுமையாக பாதிக்கும். அதோடு சீனா அமெரிக்காவை தவிர்த்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் வர்த்தக போரின் ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம்.
பதிலடி வரிகள் என்றால் என்ன? முதலில் இது என்ன வர்த்தக போர் என்று பார்க்கலாம். அமெரிக்க அதிபர் டிரம்ப் reciprocal tariff எனப்படும் வரிகளை விதிக்க உள்ளார். அதாவது பதிலடி வரி. அதாவது இந்தியா அமெரிக்கா மீது விதிக்கும் வரியை அப்படியே இந்தியா மீது அமெரிக்கா விதிக்கும்.
அதாவது ஒரு துறையில் உள்ள ஒரு பொருளுக்கு இந்தியா 30 சதவிகிதம் வரி விதிக்கிறது. அமெரிக்கா 10 சதவிகிதம்தான் வரி விதிக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.
இந்த புதிய விதிப்படி அமெரிக்காவும் அதே 30% வரியை இனி விதிக்கும். அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏப்ரல் 2ம் தேதி இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது பதிலடி வரிகளை விதிக்க போவதாக அறிவித்து உள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவிற்கான அனைத்து எஃகு இறக்குமதிக்கும் 25% வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். விவசாய பொருட்கள் மீது 100% வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.





